தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani Kendra Trikona:சனி பகவானின் வக்ர மாற்றம்.. உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகம்.. அதிர்ஷ்டத்தால் குதூகலமாகும் ராசிகள்

Sani Kendra Trikona:சனி பகவானின் வக்ர மாற்றம்.. உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகம்.. அதிர்ஷ்டத்தால் குதூகலமாகும் ராசிகள்

Marimuthu M HT Tamil
May 09, 2024 09:01 PM IST

Kendra Trikona Rajayoga: சனி பகவானின் வக்ர மாற்றத்தால் உண்டாகும் கேந்திர திரிகோண ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தை அறுவடை செய்யப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

Sani Kendra Trikona:சனி பகவானின் வக்ர மாற்றம்.. உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகம்.. அதிர்ஷ்டத்தால் குதூகலமாகும் ராசிகள்
Sani Kendra Trikona:சனி பகவானின் வக்ர மாற்றம்.. உருவாகும் கேந்திர திரிகோண ராஜயோகம்.. அதிர்ஷ்டத்தால் குதூகலமாகும் ராசிகள்

சனி பகவானின் வக்ர நிலை:

அப்படி, நவகிரகங்களில் சனி பகவான், ஒருவரின் செயல்பாட்டின் அடிப்படையில், பலன்களை, நீதி தவறாமல் தரக்கூடியவர். சுருக்கமாக சொன்னால் நீதிமான். அத்தகைய சனி பகவான், கும்ப ராசியில் சஞ்சரித்து வருகிறார். இந்நிலையில் வரக்கூடிய ஜூன் மாதம் 29ஆம் தேதி, சனி பகவான் வக்ரமாகிறார். இதனால் சில ராசியினருக்கு அசுப பலன்கள் கிடைக்கப்போகின்றன. சிலருக்கு சுப பலன்கள் கிடைக்கப்போகின்றன.

இப்படி சனி பகவானின் மாற்றத்தால், கேந்திர திரிகோண ராஜயோகம் உண்டாகிறது. இதனால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்தும், அந்த ராசிகளுக்கு கிடைக்கும் பயன்கள் குறித்தும் அறிந்துகொள்ளலாம்.

கேந்திர திரிகோண ராஜயோகத்தால் நன்மைபெறும் ராசிகள்:

கும்பம்: இந்த ராசியினருக்கு கேந்திர திரிகோண ராஜயோகத்தால், சில சுபமான முடிவுகள் உண்டாகும். இது, கும்பராசியின் ஒன்றாம் இல்லத்தில் நடந்த சந்திப்பினால் உருவாகிறது. இக்கால கட்டத்தில் இத்தனை நாட்களாக சித்ரவதையை அனுபவித்து வரும் கும்ப ராசியினர், சற்று ஆசுவாசம் அடைவர். தன் மீதான பிடிப்பு, சுயம் சார்ந்த வளர்ச்சி அதிகரிக்கும். இக்காலகட்டத்தில் சாந்தமாகும் சனிபகவான், கும்ப ராசியினருக்கு எந்த ஒரு தடங்கலையும் தரமாட்டார். இதனால், கும்ப ராசியினர் மெல்ல வாழ்வில் எடுக்கும் முயற்சிகள் சரியாகும். மேலும், வாழ்வில் இத்தனை நாட்களாக நடந்த கடும்வாழ்வுப் போராட்டத்தின்போது, விதைத்த பணிகள் உங்களுக்கு நல்ல மரமாகி,இக்கால கட்டத்தில் பலன் தரும். உங்கள் உழைப்பு தற்போதுதான் முதலாளிகளுக்குத் தெரியவரும். பணியிடத்தில் பதவி உயர்வோ, ஊதிய உயர்வோ பெறாதவர்கள், இக்காலகட்டத்தில் பெறுவார்கள்.

மேஷம்: இந்த ராசியினருக்கு, கேந்திர திரிகோண ராஜயோகத்தால், இத்தனை நாட்களாக தொழிலில் மந்தத்தன்மையுடன் செயல்பட்ட மேஷ ராசியினருக்கு, புதுப்பொலிவு கிடைக்கும். இத்தனை நாட்களாக சரியான வேலையின்றித் தவித்த மேஷ ராசியினருக்கு, உங்கள் எதிரிகள் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு நல்ல நிறுவனத்தில் கை நிறைய சம்பளம் கிடைக்கும். இதனால், இத்தனை நாட்களாக அமையாத திருமண வரன் அமையும். வங்கியில் சேமிப்புக் கணக்கில் பணத்தினைப் போட்டு, பெருக்குவீர்கள். போட்டிக் கடைகளால் தொந்தரவு பெற்ற மேஷ ராசியினர், இக்காலத்தில் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்று லாபம் அடைவர்.

மிதுனம்: இந்த ராசியினருக்கு கிடைக்கப்போகும் கேந்திர திரிகோண ராஜயோகத்தால், மிதுன ராசியினர் இத்தனை நாட்களாகப் பெற்ற அவப்பெயரில் இருந்து சற்று விடுதலை ஆவர். இந்த தருணத்தில் மிதுன ராசியினருக்கு மனதளவில் செயல் அளவில் நல்ல புரிதலும் நல்ல மாற்றங்களும் உண்டாகும். இதனால், பகைவர்களும் நண்பர்கள் ஆவர். குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். வேலையில்லாதவர்கள், புதிய வேலையைப் பெறுவர். மணமுறிவு பெற்றவர்கள் கூட இக்காலத்தில் அடுத்த திருமண பந்தத்தில் இணையலாம். உங்களால் முடிக்கமுடியாத பணிகளை எல்லாம் முடிப்பீர்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்