தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி வண்டி போட்டு வருகிறார்.. வக்ரத்தில் மாயாஜாலம்.. பணம் கொட்டும் ராசிகள் இவங்கதான்!

சனி வண்டி போட்டு வருகிறார்.. வக்ரத்தில் மாயாஜாலம்.. பணம் கொட்டும் ராசிகள் இவங்கதான்!

Suriyakumar Jayabalan HT Tamil
May 09, 2024 05:27 PM IST

Lord Sani Vakra: சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் வருகின்ற ஜூன் மாதம் 29ஆம் தேதி அன்று வக்ர பெயர்ச்சி அடைகிறார். இவருடைய வக்ர பயணம் 139 நாட்கள் தொடரும்.

சனி பணம் கொட்டும் ராசிகள்
சனி பணம் கொட்டும் ராசிகள்

சனிபகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கிய வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். தற்பொழுது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்திருக்கின்றார்.

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்தார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் வருகின்ற ஜூன் மாதம் 29ஆம் தேதி அன்று வக்ர பெயர்ச்சி அடைகிறார். இவருடைய வக்ர பயணம் 139 நாட்கள் தொடரும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கன்னி ராசி

 

சனி பகவானின் வக்கிரப் பெயர்ச்சி உங்களுக்கு அபரிமிதமான யோகங்களை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு ஏற்ற இடம் மாற்றம் கிடைக்கும். அதேபோல வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வருமானம் அதிகரிக்கப்படும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். சனி பகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கின்ற காரணத்தினால் பண வரவில் எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

துலாம் ராசி

 

வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் உங்களுக்கு கிடைக்கும். கைவிட்டுப்போன அனைத்தும் உங்களைத் தேடி வரும். வாழ்க்கையின் தரம் உயரும். நீண்ட நாட்களாக தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாக்கும். 

உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வேலைகள் உங்களுக்கு முடிவடையும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிதாக வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

மீன ராசி

 

சனி பகவானின் வக்கிர இடமாற்றம் உங்களுக்கு அனைத்து விதமான யோகங்களையும் கொடுக்கப் போகின்றது. செல்வத்தில் ஏற்பட்டு கிடந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். வாழ்க்கை தரம் உயரும் நீண்ட நாட்களாக தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் முடிவடையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கூட்டு தொழில் முயற்சிகள் நல்ல வெற்றியை தேடி தரும். திருமண வாழ்க்கையில் அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel