தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lighting Lamp: விளக்கேற்றும் போது செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும் என்னென்ன?

lighting Lamp: விளக்கேற்றும் போது செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும் என்னென்ன?

Karthikeyan S HT Tamil
Sep 25, 2023 10:43 AM IST

வீட்டில் விளக்கேற்றும் போது செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும் என்னென்ன என்பதைப் பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்.

தீபம் ஏற்றுதல்
தீபம் ஏற்றுதல் (Gettyimages)

இத்தனை சிறப்புகளை கொண்ட விளக்கேற்றும் போது சில நேரங்களில் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் தவறுகள் கூட வீட்டில் பிரச்னைகளுக்கு வழிவகுத்து விடும். எனவே வீட்டில் விளக்கேற்றும் போது செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும் என்னவென்று இங்கு தெரிந்துகொள்வோம்.

விளக்கேற்றும் போது செய்ய வேண்டியவை:

  • விளக்கேற்றும் போது மகாலட்சுமியை மனதில் வேண்டிக் கொண்டு விளக்கேற்றுவது நல்ல பலன்களை தரும்.
  • விளக்கிற்கு கீழ் கோலமிட்டு விளக்கேற்றுவது சிறந்தது.
  • பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4:30 மணி முதல் 6 மணிக்குள் தீபம் ஏற்றிவிட வேண்டும். மாலை 06 மணி முதல் 07 மணி வரையிலும் தீபம் ஏற்றலாம். காலையில் தீபம் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும்.
  • மங்களகரமான வெள்ளிக்கிழமைகளில் சர்க்கரை பொங்கல், பால் பாயசம் ஆகியவற்றை இறைவனுக்கு நைவேத்தியமாக படைத்து விளக்கு ஏற்றி வழிபடுவது நல்லது.

விளக்கேற்றும் போது செய்யக் கூடாதவை:

  • தலை முடியை கட்டாமல், அவிழ்த்து விட்ட நிலையில் பெண்கள் விளக்கேற்றக் கூடாது.
  • விளக்கு ஏற்றி சில நிமிடங்களிலே அதை அணைக்கக் கூடாது. சிறிது நேரம் ஒளிர வேண்டும்.
  • விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக் கூடாது. வாயால் ஊதியும் தீபத்தை அணைக்கக் கூடாது. பூவால் குளிர்விக்கலாம்.
  • வீட்டில் விளக்கேற்ற இலுப்பை எண்ணெய் பயன்படுத்தக் கூடாது. விளக்கிற்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் கடலை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றவே கூடாது. அப்படி ஏற்றினால் கடன்கள் பெருகும்.
  • தெற்கு திசையில் பொதுவாக தீபம் ஏற்றக் கூடாது.தெற்கு முகம் என்பது விளக்கு ஏற்றக்கூடாத ஒரு திசையாகும். எனவே நாம் தெற்கு பாத்து விளக்கு ஏற்றவே கூடாது.
  • பொதுவாக தீபம் ஏற்றினால் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக குளிர விட்டு விடக் கூடாது. இது கெடுதலைக் கொடுக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்