தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (16.04.2024): புதிய நம்பிக்கை பிறக்கும்..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான முழு பலன்கள் இதோ!

Today Rasipalan (16.04.2024): புதிய நம்பிக்கை பிறக்கும்..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான முழு பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil
Apr 16, 2024 05:20 AM IST

Today Horoscope: ஜோதிட கணிப்பின்படி, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (ஏப்ரல் 16) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் 16 ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.
ஏப்ரல் 16 ம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

மேஷம்

சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கமானவர்களின் சந்திப்பு ஏற்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். கடன் தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் தாமதமாக கிடைக்கும்.

ரிஷபம்

மனதளவில் தைரியம் பிறக்கும். பிரச்னைகளுக்கு தெளிவான தீர்வு கிடைக்கும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் மேன்மை உண்டாகும். திறமைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும்.

மிதுனம்

கனிவான பேச்சுக்கள் நம்பிக்கையை மேம்படுத்தும். விலகி இருந்த உறவினர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.

கடகம்

சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். வெளிவட்டாரத்தில் நட்பு அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும்.

சிம்மம்

எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் பொறுமையை கையாளவும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

கன்னி

திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். புதிய நபர்களால் ஆதாயம் உண்டாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் மேம்படும்.

துலாம்

அனுபவப் பூர்வமான பேச்சுக்களால் நன்மதிப்பு உண்டாகும். சில பிரச்னைகளுக்கு திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். உறவுகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை தரும். பிரியமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும்.

விருச்சிகம்

கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை வெற்றி கொள்வீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் உண்டாகும். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய நம்பிக்கை பிறக்கும்.

தனுசு

தேவையற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். சில விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்தவும். உயர் அதிகாரிகளை புரிந்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். சொத்து பிரச்னைகளில் பொறுமையை கையாளுவது நல்லது.

மகரம்

கவலை விலகும் நாள். சகோதரர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். மனதளவில் திருப்தி ஏற்படும்.

மீனம்

உடன் இருப்பவர்களின் சுயரூபங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடம் வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்