Today Rasipalan (13.04.2024): கவலைகள் விலகுமா?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான முழு பலன்கள் இதோ!
Today Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்று (ஏப்ரல் 13) வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதியான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
கருத்து வேறுபாடுகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். பழைய பிரச்னைகளுக்கு சில முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். செலவு நிறைந்த நாள்.
ரிஷபம்
குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாடிக்கையாளர்களிடத்தில் பொறுமை அவசியம். நண்பர்களிடத்தில் மதிப்பு மேம்படும். பழைய நினைவுகளால் செயல்பாடுகளில்
மிதுனம்
குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வெளியூர் பயணங்கள் சாதகமாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
கடகம்
குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். புதிய முயற்சிகளில் சாதகமான சூழல் ஏற்படும். மனதளவில் தெளிவு பிறக்கும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும்.
சிம்மம்
உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். நண்பர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். பயணங்களால் எதிர்பார்ப்பு நிறைவேறும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த மந்தநிலை குறையும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும்.
கன்னி
எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். நண்பர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். புதிய விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
துலாம்
சிக்கலான சில சூழ்நிலைகளை சமாளிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் பொறுப்பு அதிகரிக்கும். பழக்க வழக்கங்களில் மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் பற்றிய சிந்தனை மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும்.
விருச்சிகம்
பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு மேம்படும். புதிய தொழில்நுட்பம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு
தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். தேவைக்கேற்ப தனவரவுகள் ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். பயணங்களின்போது அலைபேசிகளை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளால் மாற்றம் உண்டாகும்.
மகரம்
மனதளவில் புதிய சிந்தனை உண்டாகும். தடைபட்ட தனவரவுகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். கடினமான விஷயங்களில் உள்ள நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள்.
கும்பம்
உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். நெருக்கமானவர்களின் சந்திப்பு ஏற்படும். புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மேம்படும். கவலை விலகும் நாள்.
மீனம்
உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிலும் பகுத்தறிந்து செயல்படுவீர்கள். மனை விருத்தி சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். காது தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். திறமைக்கு உண்டான வாய்ப்பு கிடைக்கும். கல்வியில் இருந்துவந்த தடுமாற்றம் நீங்கும். தடை விலகும் நாள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்