தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Eyilinathar Temple: பீமனின் தோஷம் போக்கிய தலம்!

Eyilinathar temple: பீமனின் தோஷம் போக்கிய தலம்!

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 10, 2022 08:00 PM IST

நாமக்கல் நன்செய் இடையாறு திருஎயிலிநாதர் கோயில் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.

திருஎயிலிநாதர் கோயில்
திருஎயிலிநாதர் கோயில்

இவ்வூரை சுற்றி பெரும் தெய்வ கோயில்கள் சிறு தெய்வ கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் பரிவார தெய்வங்களாக விநாயகர், முருகன், சுப்ரமணியராக ஆறுமுகம் கொண்டு வள்ளி தெய்வானையுடன் துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், சனி பகவான், பைரவர் மற்றும் காரிய சித்தி ஆஞ்சநேயர் உட்பட அனைத்து தெய்வங்களும் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.

இந்த தளத்தில் ஆழ்வார்களும் இடம் பெற்றுள்ளன. சுந்தரவள்ளியாக காட்சி அளிக்கின்றார். தாயார் இங்கு தல விருட்சமாக வன்னி மரம் அமைந்துள்ளது ஸ்ரீனிவாச பெருமாள் தனி சன்னதியில் தேவிகளுடன் காட்சியளிக்கின்றார். ஐந்து இடங்களில் சிவ பூஜை செய்த பீமனுக்கு எந்த தலத்தில் தான் அபிவிருத்தி தோஷம் நீங்கியதாக கூறப்படுகிறது.

பீமன் பிரதிஷ்டை செய்து தனக்கு ஏற்பட்ட துன்பத்தை போக்கிக் கொண்டதால் இந்த தலத்தில் சிவன் திருவேலீஸ்வரராக அருள்பாலிக்கின்றார். கோயிலில் உள்ள மூலவர் லிங்கம் பீமனால் மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பால், தண்ணீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்தாலும் இந்த லிங்கம் கரையாமல் அப்படியே இருக்கும்.

ஆகவே இந்த லிங்கம் மிக சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தலத்தில் வழிபடுபவர்களுக்கு பல்வேறு தோஷங்கள் மற்றும் பாவங்கள் நீங்கி முக்தி உண்டாகும் என்பது ஐதீகம். மேலும் தொழில், கல்வி, திருமண தடை உள்ளவர்கள் இங்கு வழிபட்டு நலம் பெற முடியும். விசேஷ பூஜைகள் பிரதோஷம் கிருத்திகை, அஷ்டமி, சிவராத்திரி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

கிபி பத்தாம் நூற்றாண்டில் கோயில் கட்டப்பட்டதாக தகவல் உள்ளது இக்கோயிலை முதலாம் இராஜராஜ சோழனும் அவரது மகன் ராஜேந்திர சோழனும் கட்டினர் என்பதற்கு கல்வெட்டு சான்றுகள் உள்ளன.

WhatsApp channel