தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  குழந்தை பாக்கியம் தரும் தெற்கு கிருஷ்ணன் கோயில்!

குழந்தை பாக்கியம் தரும் தெற்கு கிருஷ்ணன் கோயில்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 13, 2022 03:40 AM IST

கல்விக்குச் சிறப்பிடமாக விளங்கும் மதுரை தெற்கு கிருஷ்ணன் கோயில் குறித்து இங்கே காணலாம்.

தெற்கு கிருஷ்ணன் கோயில்
தெற்கு கிருஷ்ணன் கோயில்

சுவாமி பெரிய மூர்த்தியைத் தரிசிக்க வேண்டி இறைவனிடம் முறையிட்டதாகவும் அவரது வேண்டுகோளுக்கு இணங்க கனவில் தோன்றிய கிருஷ்ணர், வைகையாற்றின் கரையில் தான் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து அது சிலை எடுத்து வந்த பக்தர் இந்த கோயிலில் வைத்து பிரதிஷ்டை செய்ததாகத் தல வரலாறு கூறுகிறது. இந்த தலத்தில் பெருமாள் சுயம்பு மூர்த்தியாகக் காட்சி அளிக்கின்றார். திருப்பதி பெருமாள் தோற்றத்தில் காட்சி அளிப்பதால் மிகவும் விசேஷமாக இத்திருக்கோயில் விளக்குகிறது.

முன் மண்டபத்தில் கிருஷ்ணன் நடன வடிவத்தில் காட்சியளிக்கிறார். இது ஆதியில் வழிபட்ட மூர்த்தி என்பதால் முதலில் நவநீத கிருஷ்ணருக்குப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. சுவாமி கிருஷ்ணனுக்கு அவல், பாயசம் படையாளாகப் படைக்கப்படுகிறது.

புரட்டாசி சனிக்கிழமைகளில் இக்கோயிலில் விசேஷமாக இருக்கும் துளசி, பச்சைக் கற்பூரம், பூமாலைகள் மணக்கக் கோலாகலமாய் பூஜை நடக்கும். ஆண்டாளுக்கும் பிரகாரத்தில் சன்னதி இருப்பதால், ஆடிப்பூரத்தன்று சுவாமி ஆண்டாள் இடத்தில் காட்சியளிப்பதால் மாற்றுத்திற கோலம் சேவை வழிபாடு நடத்தப்படுகிறது.

வலப்பக்கத்தில் நாமும் போட்ட கணபதி நன்றாகத் தலையில் குட்டிக் கொண்டு அப்படியே உள்ளே நுழைந்தால், ஸ்ரீ ராமஜெயம், வெற்றிலை வடை மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட ஹனுமான் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றார். பொதுவாகச் சௌராஷ்டிரா மக்கள் அதிகளவு இக்கோயிலுக்கு வருகின்றனர்.

தாயார், சக்கரத்தாழ்வார், ராமர், லட்சுமணர், சீதாதேவி, பள்ளி கொண்ட பெருமாள், பளிங்கினால் செய்த ராதாகிருஷ்ணன், லட்டு கோபால், லட்சுமி, ஹயக்ரீவர், நரசிம்மர், கருட சன்னதிகளும் இக்கோயிலில் உள்ளன. குழந்தை இல்லாதவர்களுக்கு இங்கு வந்து வழிபட்டால் உடனே குழந்தை பாக்கியம் கிடைப்பதாக நம்பப்படுகிறது. கல்விக்குச் சிறப்பிடமாகவும் மதுரை தெற்கு கிருஷ்ணன் கோயில் விளக்குவதாகக் கூறப்படுகிறது.

WhatsApp channel