தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here You Can Know About The History Of Ramanathapuram Uppoor Veilugantha Vinayagar Temple

HT Yatra: வெயில் படும் விநாயகர்.. சூரியனின் சாபம் நீங்கிய தலம்.. வெயிலுகந்த விநாயகர் கோயில்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 19, 2024 07:00 AM IST

Veilugantha Vinayagar Temple: பல கோயில்களில் அமர்ந்திருந்து விநாயகர் பக்தர்களுக்கு காட்சி கொடுத்த வருகிறார். விநாயகரின் சிறப்புமிக்க கோயில்களில் ஒன்றாக விளங்கக் கூடியது உப்பூர் வெயிலுகந்த விநாயகர் திருக்கோயில். இந்த திருக்கோயில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

வெயிலுகந்த விநாயகர் கோயில்
வெயிலுகந்த விநாயகர் கோயில்

ட்ரெண்டிங் செய்திகள்

மரத்தடியில் இருந்து மிகப்பெரிய கோயில்கள் வரை அனைத்து கோயில்களிலும் முதல் கடவுளாக விளங்கக்கூடியவர் விநாயகர். மனித உடலும் யானை தலையும் கொண்டு வித்தியாசமான உடலமைப்பை பெற்றிருக்கக் கூடியவர் விநாயகர். இவரை முதலில் வணங்கி சென்றால் எடுத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

பல கோயில்களில் அமர்ந்திருந்து விநாயகர் பக்தர்களுக்கு காட்சி கொடுத்த வருகிறார். விநாயகரின் சிறப்புமிக்க கோயில்களில் ஒன்றாக விளங்கக் கூடியது உப்பூர் வெயிலுகந்த விநாயகர் திருக்கோயில். இந்த திருக்கோயில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தலத்தின் சிறப்பு

 

இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய விநாயகர் பெருமான் மீது தட்சிணாயன காலத்தில் தெற்கு பகுதியில் இருந்து சூரிய பகவானின் வெளிச்சம் படும். அதே உத்தராயன காலங்களில் வடக்கு பகுதியில் இருந்து சூரியபகவானின் வெளிச்சம் படும். இதுவே இந்த திருக்கோயிலின் மிகப்பெரிய சிறப்பாகும்.

பாண்டிய மன்னர்களுக்கு பிறகு ராமநாதபுரத்தை சேதுபதி மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர் அப்போது அவர்களால் இந்த உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

தல வரலாறு

 

தட்சன் மகள் தாட்சாயணியை சிவபெருமான் மணந்து கொண்டார். உலகத்தையே ஆளக்கூடிய சிவபெருமான் தண்ணீர் பணிந்து நடக்க வேண்டும் என தட்சன் விரும்பினார். இதனால் மிகப்பெரிய ஒரு வேள்வியை நடத்தினார். சிவபெருமானை தவிர அனைவரும் இதில் கலந்து கொண்டார்கள்.

தனது கணவனை அடிபணிய வைக்க வேண்டும் என நடத்தப்பட்ட பூஜையில் கலந்து கொண்டவர்கள் மீது பார்வதி தேவிக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது. இதனால் வீரபத்திரரை அனுப்பி அந்த யாகத்தை அழித்து விடுமாறு கூறினார்.

இந்த யாகத்தில் கலந்து கொண்ட பலருக்கும் சாபம் அளிக்கப்பட்டது. அதில் சாபம் பெற்ற ஒருவர்தான் சூரிய பகவான். அவர் தனது சாபத்தை நிறைவேற்றுவதற்காக பல தேடுதல் வேட்டையை நடத்தினார்.

அதற்காக பாண்டிய நாட்டில் இருக்கக்கூடிய கீழக்கடற்கரை ஓரமாக அமைந்துள்ள வண்டிமந்தார வனம் விநாயகரின் வழிபட தொடங்கினார். கடும் தவத்திற்கு பிறகு விநாயகர் அவரது வேண்டுதலை ஏற்றுக் கொண்டார். மேலும் அவரது பாவங்களையும் நீக்கி அருள் புரிந்தார்.

எனக்கு நீங்கள் அருள் புரிந்தது போல் இங்கு வரக்கூடிய பக்தர்களுக்கும் தாங்கள் அருள் புரிய வேண்டும் என சூரிய பகவான் கேட்டுக்கொண்டார். மேலும் நீங்கள் கோயில் கொண்டிருக்கும் இந்த இடத்தில் உங்களுடைய திருமேனி மீது எனது ஒலிக்கதிர்கள் முழுமையாக பட வேண்டும் என வேண்டிக் கொண்டார். அந்த வரத்தை விநாயகர் அப்படியே கொடுத்தார்.

சூரிய பகவானின் கதிர்கள் இங்கு வீற்றிருக்கக்கூடிய விநாயகரின் திருமேனியில் முழுமையாக படுகின்ற காரணத்தினால் இந்த விநாயகருக்கு வெயிலுகந்த விநாயகர் என அழைக்கப்படுகிறார்.

1905 ஆம் ஆண்டு இந்த திருக்கோயிலில் ராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி என்ற மன்னன் கட்டியதாக கூறப்படுகிறது. மன்னனின் கனவில் தோன்றி எப்போதும் என் மீது வெயில் படும்படி கர்ப்ப கிரகம் அமைத்து கோயில் கட்டித் தருமாறு விநாயகர் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

ராமனின் வேண்டுதல்

 

சீதையைத் தேடி வானரக் கூட்டங்களோடு ராமபிரான் இலங்கை நோக்கி பயணம் செய்தார் அப்போது இந்த வன்னி வனத்தை அடைந்தார். அங்கு வீற்றிருக்கக்கூடிய வெயில் உகந்த விநாயகரை வணங்கி தனக்கு வெற்றி கிடைக்க தாங்கள் ஆசி வழங்க வேண்டும் என வேண்டிக் கொண்டார். விநாயகப் பெருமான் அப்படியே ஆசி வழங்கி அவரை அனுப்பி வைத்தார் என புராணங்களில் கூறப்படுகிறது.

WhatsApp channel