ரிஷப ராசி 2025 புத்தாண்டு பலன்கள்: வாழ்க்கை மாறப் போகுது.. குரு கொட்டப் போகின்றார்.. 2025 எப்படி இருக்கும் பாக்கலாமா?
Rishaba Rasi: அனைத்து ராசிகளுக்கும் இந்த கிரகங்களின் மாற்றம் கலவையான பலன்களை அள்ளிக் கொடுக்கும். அந்த வகையில் வருகின்ற புத்தாண்டு 2025 ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி அமையும் என்பது குறித்து இங்கு காணலாம்.
Rishaba Rasi: ஒவ்வொரு புத்தாண்டும் எப்போதும் அனைவருக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியான தருணமாக அமையும். பல கஷ்டங்கள் அல்லது இன்பங்கள் உள்ளிட்டவற்றை கடந்து வந்தாலும் வருகின்ற ஆண்டு நமக்கு மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக இருக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி எந்த நாட்களாக இருந்தாலும் சரி எந்த புத்தாண்டாக இருந்தாலும் கிரகங்களின் அடிப்படையிலேயே ஒருவரின் வாழ்க்கை அமையும் என்பது அதன் நியதி ஆகும். தற்போது 2025 ஆம் ஆண்டு பல்வேறு மிகப்பெரிய கிரக மாற்றங்களை சந்திக்க போகின்றது.
அந்த கிரக மாற்றங்கள் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த போகின்றது. அனைத்து ராசிகளுக்கும் இந்த கிரகங்களின் மாற்றம் கலவையான பலன்களை அள்ளிக் கொடுக்கும். அந்த வகையில் வருகின்ற புத்தாண்டு 2025 ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி அமையும் என்பது குறித்து இங்கு காணலாம்.
குருபகவான் 2024 ஆம் ஆண்டு முழுவதும் உங்கள் ராசியில் பயணம் செய்து வந்தார். 2025 ஆம் ஆண்டு மிதுன ராசிக்கு செல்கிறார். கடந்த காலங்களில் நீங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் அனைத்தும் தற்போது உங்களுக்கு மிகப்பெரிய வெற்றி பாதையை அமைத்துக் கொடுப்போம்.
குரு 2025
குருபகவான் வருகின்ற 2025 பிப்ரவரி 7ஆம் தேதி அன்று வக்கிர நிலையில் 12வது வீட்டை பார்த்தபடி செல்கிறார். தற்போது நீங்கள் பல்வேறு விதமான சிக்கல்களை சந்தித்து வந்தாலும். பிப்ரவரி மாதம் வரும் வரை உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைப்பது சற்று தாமதமாகும்.
குரு பகவான் இதுவரை உங்களுக்கு செய்யாமல் இருக்கும் அனைத்து நல்ல விஷயங்களையும் இந்த ஆண்டு செய்து கொடுப்பார். வேறு ராசிக்கு குரு பகவான் உங்கள் ராசியில் இருந்து இடம் மாறும்பொழுது இரண்டாவது இடத்தில் இருக்கக்கூடிய குரு உங்களுக்கு சொத்து சம்பந்தப்பட்ட முன்னேற்றங்களை அள்ளிக் கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.
நிதி நிலைமை
குரு பகவான் உங்கள் ராசியில் 11 வது வீட்டில் வரும்பொழுது நிலம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றத்தை கொடுப்பார். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நிதி நிலைமையில் உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கக்கூடும். இந்த காலகட்டம் உங்களுக்கு ஏற்றவாறு அமையக்கூடும். குடும்பத்தினரோடு சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கப் போகுது. குரு பகவான் உங்களுக்கு ராஜயோகத்தை கொண்டுவரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
குருபகவான் உங்கள் ராசியை எட்டாவது இடத்தை பார்வையிடப் போகிறார். அதனால் உங்களுக்கு பணம் தானாக வந்து சேரும். வியாபாரம் மற்றும் தொழிலில் உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கக்கூடும். பொருளாதாரத்தில் இருந்து சிக்கல்களும் இருக்காது.
தொழில் வாழ்க்கை
புதிய முதல் செய்து தொழிலை தொடங்குபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடும் வாடிக்கையாளர்கள் உங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள் உங்களுக்கு எதிராக நடக்கக்கூடிய காரியங்கள் கூட சாதகமாக மாறிவிடும் நீண்ட தூர பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது கடல் கடந்து செல்லக்கூடிய வாய்ப்புகளும் உங்களுக்கு ஏற்படும் ஆனால் அனைத்து காரியங்களும் உங்களுக்கு சிறப்பாக அமையும் இதுவரை தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கும் அந்தமான சூழ்நிலை இருந்தால் அதில் இருக்கக்கூடிய சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
புதிய தொழில் தொடங்குவதற்கு சரியான காலகட்டமாக இது அமையும் அது மிகப்பெரிய லாபத்தை உங்களுக்கு பெற்று தரும் மற்றவர்களிடத்தில் தொழில் மூலம் உங்களுக்கு மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் 2025 ஆம் ஆண்டு குருபகவான் இடமாற்றம் செய்யும் பொழுது உங்களுக்கு யோகம் கிடைக்கப் போகின்றது அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கக்கூடும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.