Happy Raksha Bandhan: ரக்ஷா பந்தன் ராசிகள்.. நீல நிலவில் அதிர்ஷ்டம் கொட்டப் போகும் ராசிகள்.. பணத்தில் அடைவது யார்?-here we will see the zodiac signs that will play money on raksha bandhan festival - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Happy Raksha Bandhan: ரக்ஷா பந்தன் ராசிகள்.. நீல நிலவில் அதிர்ஷ்டம் கொட்டப் போகும் ராசிகள்.. பணத்தில் அடைவது யார்?

Happy Raksha Bandhan: ரக்ஷா பந்தன் ராசிகள்.. நீல நிலவில் அதிர்ஷ்டம் கொட்டப் போகும் ராசிகள்.. பணத்தில் அடைவது யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 19, 2024 12:45 PM IST

Happy Raksha Bandhan: விசேஷத் திருநாளான ரக்ஷா பந்தன் நாளில் நடைபெறுகிறது. இதனால் இந்த நிகழ்வு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக மாறுகிறது. இந்நிலையில் சந்திர பகவான் கும்ப ராசியில் இந்த நேரத்தில் பயணம் செய்வார். இது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது.

Happy Raksha Bandhan: ரக்ஷா பந்தன் ராசிகள்.. நீல நிலவில் அதிர்ஷ்டம் கொட்டப் போகும் ராசிகள்.. பணத்தில் அடைவது யார்?
Happy Raksha Bandhan: ரக்ஷா பந்தன் ராசிகள்.. நீல நிலவில் அதிர்ஷ்டம் கொட்டப் போகும் ராசிகள்.. பணத்தில் அடைவது யார்?

அமாவாசை மற்றும் பௌர்ணமி என மாதம் தோறும் 15 நாட்களுக்கு ஒரு முறை இயற்கை நிகழ்வு நிகழ்வுகின்றது. இப்படி சந்திர பகவானின் மாற்றங்கள் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். வருகின்ற ஆகஸ்ட் 19ஆம் தேதி அன்று நிறைய நிகழ்வான நீல நிற நிலவு வரப் போகின்றது. அதாவது இன்று சந்திர பகவான் நீல நிறத்தில் காட்சி கொடுக்கப் போகின்றார்.

இந்த விசித்திரமான நிகழ்வு விசேஷத் திருநாளான ரக்ஷா பந்தன் நாளில் நடைபெறுகிறது. இதனால் இந்த நிகழ்வு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக மாறுகிறது. இந்நிலையில் சந்திர பகவான் கும்ப ராசியில் இந்த நேரத்தில் பயணம் செய்வார். இது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்தும் காணலாம்.

நீல நிலவு

ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி அன்று இந்த நீல நிலவு பல சுபயோகங்களை உருவாக்கியுள்ளது. இந்த காலகட்டம் ஜோதிட சாஸ்திரத்தின் படி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது. சந்திர பகவான் கும்ப ராசியில் சனியோடு இணைந்து பயணம் செய்து வருகின்றார். இதனால் சித்தி யோகம் உருவாக்கியுள்ளது. பல யோகங்கள் உருவாகின்ற இந்த திருநாளில் நீல நிலவால் சில ராசிகள் அற்புதமான பலன்களை பெறப்போகின்றன.

அதிர்ஷ்ட ராசிகள்

நீல நிலவு பல சுபயோகங்களை உருவாக்கிய காரணத்தினால் ஒரு சில ராசிகள் இதனால் மிகவும் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். மேஷ ராசி, கும்ப ராசி, தனுசு ராசி, சிம்ம ராசி, மகர ராசி, மீன ராசி ஆகிய ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அளவில்லாமல் கிடைக்கப் போகின்றது.

இந்த ராசிக்காரர்களுக்கு இந்த திருநாளில் இருந்து நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். அதே போல தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும் குடும்பத்தின் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். தொழில் விஷயங்களில் புதிய முதலீடுகள் உங்களுக்கு இரட்டிப்பான லாபத்தை பெற்று தரும்.

கல்வி மற்றும் குடும்ப வாழ்க்கை

உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய முதலீடுகளால் உங்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தினரால் முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். வெளிநாட்டில் படிப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர்கல்விக்காக மாணவர்கள் வெளிநாடு செல்லக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். குழந்தைகளால் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு உதவியாக இருப்பார்கள். அனைத்து விதமான சுப சவுகரியங்களும் கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9