Suriyan Horoscope: சட்டையை கிழித்து தொங்கவிடும் சூரியன்.. ஐயோ அம்மா எனக் கதறும் ராசிகள்.. 2 ராசிகள் கண்ணீர்
Lord Sun Transit: சூரிய பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளும் நல்ல தாக்கத்தை பெற்றாலும் இரண்டு ராசிகள் மோசமான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Lord Sun Transit: நவக்கிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றினாலும் சூரிய பகவானின் இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார்.
இந்நிலையில் சூரிய பகவான் கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான சிம்ம ராசிகள் நுழைந்தார். இது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரிய பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளும் நல்ல தாக்கத்தை பெற்றாலும் இரண்டு ராசிகள் மோசமான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மகர ராசி
சூரிய பகவான் உங்கள் ராசியில் எட்டாவது வீட்டை ஆட்சி செய்து வருகின்றார். இயற்கையாகவே உங்களுக்கு பகை உணர்வு அதிகரிக்கும். சூரிய பகவானின் சொந்த ராசி பயணம் என்கின்ற காரணத்தினால் நீங்கள் மிகவும் சவாலான சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதயம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இந்த காலகட்டத்தில் நீங்கள் தனி கவனம் எடுத்து உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்.
உங்களது உணவு பழக்க வழக்கங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திடீர் சிக்கல்கள் உங்களை தேடி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனவே எச்சரிக்கையாக இருங்கள். புதிய முதலீடுகள் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். வியாபாரம் மற்றும் தொழில் சற்று மந்தமாக இருக்கும்.
குடும்பத்தினரிடம் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களது அமைதி சீர்குலைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது தேவையற்ற நிதி விரயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
கும்ப ராசி
சனி பகவானின் சொந்தமான ராசியாக நீங்கள் விளங்கி வருகின்றீர்கள். சூரிய பகவான் உங்களோடு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த போகின்றார். உங்களுடைய ராசியின் ஏழாவது வீட்டின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். திருமண வாழ்க்கையில் ஏகப்பட்ட சிக்கல்கள் ஏற்படக்கூடும். வாழ்க்கை துணையோடு உங்களுக்கு சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சக தொழிலாளர்களோடு உங்களுக்கு சண்டை மற்றும் சச்சரவுகள் ஏற்படக்கூடும்.
உயர் அலுவலர்களுடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனைத்து செயல்பாடுகளிலும் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவி இடையே மோதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பல்வேறு விதமான சிக்கல்களை நீங்கள் திருமண வாழ்க்கையில் சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்.
கட்டுப்பாடுகளை விட்டு நீங்கள் தளர்ந்து செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சூரிய பகவான் உங்களுக்கு பல்வேறு விதமான சோதனைகளை கொடுக்கப்போகின்றார். தலைகன மோதல்கள் உங்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. திருமண வாழ்க்கையில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த காலகட்டம் உங்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும். உறவினர்களோடு பேசும்போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல்வேறு விதமான சிக்கல்கள் உங்களுக்கு வந்து கொண்டு இருக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
தொடர்புடையை செய்திகள்