தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will See The Rasis That Get Rajayoga Due To Transit Of Lord Saturn

சனி பிரித்து மேயப் போகிறார்.. புரட்டாமல் விடமாட்டார்.. அதிர்ஷ்ட பண மழையில் நனையும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 18, 2024 09:45 AM IST

Saturn Transit: சனிபகவான் வரும் ஏப்ரல் 7-ம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைகின்றார். அவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

சனி
சனி

ட்ரெண்டிங் செய்திகள்

கர்ம வினைகளை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனிபகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்த 2024 ஆம் ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது.

சனி பகவானின் ஒவ்வொரு அசைவும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது சனி பகவான் நட்சத்திர இடமாற்றத்தை செய்யப் போகின்றார்.

சனிபகவான் வரும் ஏப்ரல் 7-ம் தேதி அன்று பூரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைகின்றார். அவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சனியின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு லாபகரமானதாக அமைந்துள்ளது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆடம்பர வசதிகள் அதிகரிக்க கூடும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பழைய முதலீடுகள் உங்களுக்கு லாபகரமானதாக அமையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவு அடையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷப ராசி

 

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்க உள்ளது. கூட்டுத்தொழில் முயற்சிகள் உங்களுக்கு சிறப்பான பலன்களை தரும்.

மிதுன ராசி

 

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு மங்கள யோகத்தை கொடுக்கப் போகின்றது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு ஏற்றவாறு நடந்து கொள்வார்கள். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

WhatsApp channel