Lord Sani Vakra Nivarthi: 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி.. நவம்பர் மாதம் முதல் 3 ராசிகள் வீட்டில் பணமழை.. வந்துவிட்டது-here we will see about the zodiac signs that will increase the income due to lord sani vakra nivarthi - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Sani Vakra Nivarthi: 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி.. நவம்பர் மாதம் முதல் 3 ராசிகள் வீட்டில் பணமழை.. வந்துவிட்டது

Lord Sani Vakra Nivarthi: 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி.. நவம்பர் மாதம் முதல் 3 ராசிகள் வீட்டில் பணமழை.. வந்துவிட்டது

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 05, 2024 10:44 AM IST

Lord Sani Vakra Nivarthi: சனி பகவானின் வக்கிர நிவர்த்தி அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Lord Sani Vakra Nivarthi: 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி.. நவம்பர் மாதம் முதல் 3 ராசிகள் வீட்டில் பணமழை.. வந்துவிட்டது
Lord Sani Vakra Nivarthi: 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி.. நவம்பர் மாதம் முதல் 3 ராசிகள் வீட்டில் பணமழை.. வந்துவிட்டது

சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். சனி பகவான் முப்பது ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். அவர் 2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்வார் சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும். மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் தற்போது வக்கிர நிலையில் பயணம் செய்து வரும் சனி பகவான் வருகின்ற நவம்பர் மாதம் வக்கிர நிவர்த்தி அடைகின்றார். சனி பகவானின் வக்கிர நிவர்த்தி அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கும்ப ராசி

சனிபகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் வக்கிர நிவர்த்தி அடைய உள்ளார். இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். பணத்தை சேமிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். நட்பு வட்டாரங்கள் அதிகரிக்கும். 

நல்ல பலன்கள் உங்களுக்கு தேடி வரும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். பண வரப்பில் எந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

ரிஷப ராசி

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சனி பகவான் வக்கிரம் நிவர்த்தி அடைய போகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும். ஏழை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புத்திசாலித்தனத்தால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கஷ்டப்பட்டு செய்யக்கூடிய அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும். தொழில் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும் வேலை செய்யும். 

இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும். நவம்பர் மாதத்தில் இருந்து உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல யோகம் கிடைக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களை தேடி வரும்.

மிதுன ராசி

உங்கள் ராசிகள் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் பத்திர நிபர்த்தி அடைகின்றார். இதனால் உங்களுக்கு நவம்பர் மாதம் முதல் அதிர்ஷ்ட கதவு திறக்கப் போகின்றது. வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி ஆதாயங்கள் அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். 

செய்யக்கூடிய வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாகவும் திருப்திகரமாகவும் இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மாணவர்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.