Saturn Transit 2025: சனி.. சனி.. சனி.. மீன ராசியில் 2025 நுழைகிறார்.. இந்த ராசிகள் வாழ்க்கை புரண்டு விழும்-lets see about the rasis that will receive yoga through saturn transit in 2025 - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Saturn Transit 2025: சனி.. சனி.. சனி.. மீன ராசியில் 2025 நுழைகிறார்.. இந்த ராசிகள் வாழ்க்கை புரண்டு விழும்

Saturn Transit 2025: சனி.. சனி.. சனி.. மீன ராசியில் 2025 நுழைகிறார்.. இந்த ராசிகள் வாழ்க்கை புரண்டு விழும்

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 02, 2024 06:03 PM IST

Saturn Transit 2025: சனி பகவானின் மீன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சொர்க்க வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Saturn Transit 2025: சனி.. சனி.. சனி.. மீன ராசியில் 2025 நுழைகிறார்.. இந்த ராசிகள் வாழ்க்கை புரண்டு விழும்
Saturn Transit 2025: சனி.. சனி.. சனி.. மீன ராசியில் 2025 நுழைகிறார்.. இந்த ராசிகள் வாழ்க்கை புரண்டு விழும்

ஏனென்றால் இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர் அதிக காலம் எடுத்துக் கொள்கிறார். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கும் கர்மநாயகனாக சனி பகவான் விளங்கி வருகின்றார்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் சனிபகவான் தற்போது பயணம் செய்து வருகின்றார் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்வார். சனி பகவானின் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மீன ராசியில் நுழைகின்றார். 

இது குரு பகவானின் சொந்தமான ராசியா 2027 வரை இதே ராசியில் பயணம் செய்வார். சனி பகவானின் மீன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சொர்க்க வாழ்க்கையை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

2025 ஆம் ஆண்டு சனி பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை பெற்றுத்தரும். உங்கள் ராசியில் 11 ஆவது வீட்டில் சண்முகமாய் சஞ்சாரம் செய்ய உள்ளார். நீண்ட நாள் நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். 

கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சிக்கிக் கடந்த பணம் உங்களை வந்து சேரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும்.

மிதுன ராசி

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சனி பகவான் 2025 ஆம் ஆண்டு பயணம் செய்யப்போகின்றார். இதனால் கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். தேவையற்ற செலவுகள் அனைத்தும் குறையும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு சனிபகவானால் உங்களைத் தேடி வர போகின்றது.

கும்ப ராசி

உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் 2025 ஆம் ஆண்டு சனிபகவான் பயணம் செய்யப்போகின்ற இதனால் உங்களுக்கு ஏழரை சனியின் இரண்டாவது கட்டம் நடந்து கொண்டிருக்கின்றது உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மனரீதியாக உங்களுக்கு நிம்மதி அதிகரிக்கும். 

பணம் சம்பந்தப்பட்ட கவலைகள் அனைத்தும் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முயற்சிகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.