Rahu Peyarchi Palangal: சனி மீது ஏறிய ராகு.. 2026 வரை சிக்கிக்கொண்ட 4 ராசிகள்.. கோடீஸ்வரராக மாறுவது யார்?-here we will see the zodiac signs that will be showered with luck due to the transit of lord rahu in aquarius - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu Peyarchi Palangal: சனி மீது ஏறிய ராகு.. 2026 வரை சிக்கிக்கொண்ட 4 ராசிகள்.. கோடீஸ்வரராக மாறுவது யார்?

Rahu Peyarchi Palangal: சனி மீது ஏறிய ராகு.. 2026 வரை சிக்கிக்கொண்ட 4 ராசிகள்.. கோடீஸ்வரராக மாறுவது யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 02, 2024 01:29 PM IST

Rahu Peyarchi Palangal: ராகு பகவானின் கும்ப ராசி பயனும் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காண்போம்.

Rahu Peyarchi Palangal: சனி மீது ஏறிய ராகு.. 2026 வரை சிக்கிக்கொண்ட 4 ராசிகள்.. கோடீஸ்வரராக மாறுவது யார்?
Rahu Peyarchi Palangal: சனி மீது ஏறிய ராகு.. 2026 வரை சிக்கிக்கொண்ட 4 ராசிகள்.. கோடீஸ்வரராக மாறுவது யார்?

இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி அன்று மீன ராசியில் இருந்து விலகி கும்ப ராசிக்கு ராகு பகவான் செல்கின்றார். 2026 ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி வரை இதே ராசியில் ராகு பகவான் பயணம் செய்வார்.

ராகு பகவானின் கும்ப ராசி பயனும் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காண்போம்.

மேஷ ராசி

ராகு பகவானின் அனுகூலமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. நேர்மறையான மாற்றங்கள் உங்களுக்கு கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களைத் தேடி வரும். பெற்றோரின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். தடைபட்டுக் கடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். 

மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். அரசாங்க உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

மகர ராசி

ராகு பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு பல்வேறு வழிகளில் இருந்து பலன்களை கொடுக்கப் போகின்றது. பணத்தை திரும்ப பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். திடீரென செல்வங்கள் உங்களைத் தேடி வரும். நிறுத்தப்பட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். 

நீண்ட கால நிதி சிக்கல்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். அனைத்து விதமான சுப யோகங்களும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் குறையும் வெளியூர் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். அற்புதமான யோகங்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. வாழ்க்கையில் பல்வேறு விதமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

கும்ப ராசி

ராகு பகவானின் அனைத்து விதமான பலன்களும் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். 

வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதி அதிகரிக்கும். மன நிறைவு உங்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். எதிர்பார்த்ததை விட தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் உங்களுக்கு கிடைக்கும். சிந்தித்து செயல்படுவது நல்லது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.