Guru: குருபகவானால் பணத்தில் நனையும் ராசிகள்.. இனி வேட்டை ஆரம்பம்.. உச்சத்தில் யார்?-here we will see about the zodiac signs that will be drenched in the rain of money by guru bhagavan - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru: குருபகவானால் பணத்தில் நனையும் ராசிகள்.. இனி வேட்டை ஆரம்பம்.. உச்சத்தில் யார்?

Guru: குருபகவானால் பணத்தில் நனையும் ராசிகள்.. இனி வேட்டை ஆரம்பம்.. உச்சத்தில் யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 12, 2024 04:48 PM IST

Guru: குரு பகவானின் வக்கிர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் வருகின்ற பிப்ரவரி நான்காம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்கின்றார். குருபகவானின் வக்கிர நிலையால் 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Guru: குருபகவானால் பணத்தில் நனையும் ராசிகள்.. இனி வேட்டை ஆரம்பம்.. உச்சத்தில் யார்?
Guru: குருபகவானால் பணத்தில் நனையும் ராசிகள்.. இனி வேட்டை ஆரம்பம்.. உச்சத்தில் யார்?

குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். குரு ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் கடந்த மே மாதம் முதல் தேதி அன்று குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். அந்த வகையில் குரு பகவான் வருகின்ற அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி அன்று ரிஷப ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்ய உள்ளார்.

குரு பகவானின் வக்கிர பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் வருகின்ற பிப்ரவரி நான்காம் தேதி வரை இதே நிலையில் பயணம் செய்கின்றார். குருபகவானின் வக்கிர நிலையால் 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

தனுசு ராசி

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் குரு பகவான் வக்கிர நிலை அடைகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். நீண்ட நாட்களாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும். 

அதிர்ஷ்டத்தின் ஆதரவினால் உங்களுக்கு நிலவில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். சிக்கி கிடந்த பணம் உங்கள் கைகளுக்கு வந்து சேரும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். ஆன்மீக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

கடக ராசி

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குரு வக்ர நிலை அடைகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். அதற்கு முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். லட்சியங்கள் அனைத்தும் உங்களுக்கு நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். படிப்பிற்காக வெளிநாட்டு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். 

உயர் அலுவலர்களின் நல்ல உறவு உங்களுக்கு கிடைக்கும். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் தொடர்பான பயணங்கள் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை பெற்று தரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

கன்னி ராசி

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குருபகவான் வக்ர நிலை அடைய உள்ளார். இதனால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். 

நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். அவசரப்பட்டு எந்த செயலிலும் நீங்கள் இரண்டாமல் இருப்பது நல்லது. தொழிலில் உங்களுக்கு எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு கொள்ளை லாபம் கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்