இன்று முதல் ஆரம்பம்.. துலாம் ராசியில் நுழையும் புதன்.. பணம் கொட்ட சில நாட்கள் வாய்ப்பு.. நல்ல காலம்!
Lord Mercury: ஒரே மாதத்தில் இரண்டு முறை புதன் பகவான் தனது இடத்தை மாற்றுகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கட்டாயம் ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் முன்னேற்றத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்

Lord Mercury: நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், படிப்பு, பேச்சு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
May 15, 2025 05:00 AM'வெற்றி தேடி வரும்.. உழைப்பில் கவனம்' மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே இன்று மே. 15 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 14, 2025 08:05 PMகுரு பகவான் - சூரியன் ராசி மாற்றம்.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு பண மழை, வெற்றி உறுதி.. உங்க ராசி என்ன?
May 14, 2025 05:09 PMநாளைய ராசிபலன்: தடைகள் உடையுமா? செலவுகள் அதிகரிக்குமா? மேஷம் முதல் மீனம் வரை.. நாளை மே 15 உங்களுக்கு எப்படி இருக்கும்?
May 14, 2025 01:38 PMபணம் மூட்டைகளோடு குபேரன் வருகிறார்.. கொட்டி தீர்க்கப் போகும் ராசிகள்.. எது உங்க ராசி சொல்லுங்க?
May 14, 2025 10:32 AMதொழில் வளர்ச்சி, பதவி உயர்வு.. தொட்டதெல்லாம் வெற்றி.. குருவின் நட்சத்திரத்தில் புதன் சஞ்சாரத்தால் யாருக்கு ஜாக்பாட்!
May 14, 2025 10:05 AMசனி வச்சு செய்யப்போகும் ராசிகள்.. பண மூட்டைகள் கொட்டப் போகுது.. உங்க ராசி இதுல இருந்தா ஜாலிதான்!
புதன் பகவான் முதன் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் கன்னி ராசியில் பயணம் செய்து வந்தார். இன்று அதாவது அக்டோபர் 10ஆம் தேதி அன்று துலாம் ராசியில் நுழைந்தார்.
அதே சமயம் இரண்டாவது முறையாக இதே அக்டோபர் மாதத்தில் 29ஆம் தேதி அன்று விருச்சிக ராசியில் நுழைகின்றார். ஒரே மாதத்தில் இரண்டு முறை புதன் பகவான் தனது இடத்தை மாற்றுகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கட்டாயம் ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் முன்னேற்றத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்
துலாம் ராசி
புதன் பகவானால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கக்கூடும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும்.
எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களைத் தேடி வரும்.
விருச்சிக ராசி
புதன் பகவானின் இடமாற்றத்தால் உங்களுக்கு பல்வேறு விதமான முன்னேற்றங்கள் கிடைக்கக்கூடும். அக்டோபர் மாதத்தில் நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். அதே சமயம் நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையில் பல்வேறு விதமான முன்னேற்ற வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படக்கூடும் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல உயர்வு கிடைக்கும். நீண்ட நாள் ஆச்சுகள் அனைத்தும் நிறைவேறும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும்.
மகர ராசி
புதன் பகவானின் இடமாற்றத்தால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் சிறப்பான வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத நேரத்தில் முன்னேற்றம் கிடைக்கக்கூடும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும்.
வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
