புதன் பெயர்ச்சி! மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்!
வியாபாரம், நுண்ணறிவு, கல்வி, புத்திசாலித்தனம், பேச்சுத்திறன் ஆகியவற்றின் காரகத்துவம் பெற்ற கிரகம் ஆக புதன் பகவான் உள்ளார். புதன் பகவான் துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகும் நிலையில் மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிக்காரர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ஏற்றங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

வியாபாரம், நுண்ணறிவு, கல்வி, புத்திசாலித்தனம், பேச்சுத்திறன் ஆகியவற்றின் காரகத்துவம் பெற்ற கிரகம் ஆக புதன் பகவான் உள்ளார். புதன் பகவான் துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகும் நிலையில் மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிக்காரர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ஏற்றங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 26, 2025 11:26 AMபண கட்டிலில் படுத்து உருளும் ராசிகள்.. சூரியன் அஸ்வினியில் நுழைகிறார்.. தமிழ் புத்தாண்டு ராசிகள்!
Apr 26, 2025 06:30 AMகொட்டிக் கொடுக்க வருகிறார் சுக்கிரன் புதன் சேர்க்கை.. விடாமல் பணமழை கொட்டப் போகும் ராசிகள்
Apr 26, 2025 05:00 AMநேர்மை முக்கியம்.. அதிர்ஷ்டத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. இன்று ஏப்.26, 2025 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
Apr 25, 2025 09:47 AMபுதாதித்ய யோகம்: வாயை மூடுனா போதும்.. பணம் தானாக கொட்டும் ராசிகள்.. சூரியன் புதன் சேர்க்கை.. உங்கள் ராசி இருக்கா?
Apr 25, 2025 07:00 AMசனி குறி வைத்து பண மழை கொட்டப் போகிறார்.. ஜாலியான ராசிகள்.. கஷ்டங்கள் விலக போகுது!
Apr 25, 2025 05:00 AMபண மழை கொட்டும் யோகம் யாருக்கு.. அதிர்ஷ்டம் கை வருமா.. இன்று ஏப்.25 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
மேஷம்
புதன் பகவானின் பெயர்ச்சி மேஷம் ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் வகையில் இருக்கும். பேசுவதற்கு முன்னர் சிந்தித்து செயல்படுவீர்கள். அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம். அமைதியான பேச்சுவார்த்தை மூலம் உறவுகளின் பிரச்னையை தீர்ப்பீர்கள். உங்களின் நயமான பேச்சு மூலம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பீர்கள். சிலருக்கு காதல் கைக்கூடும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் பொறுப்புகளில் அதிக கவனம் செலுத்த புதன் பெயர்ச்சி காரணமாக இருக்கும். உங்களின் வளைந்து கொடுக்கும் தன்மை லாபத்தை கொண்டு வரும். பணியிடங்களில் கூடுதல் வேலைகளை செய்ய வேண்டிவரும். குடும்பத்தினருக்கு சில உடல்நல பிரச்னைகள் ஏற்படலாம். செரிமான அமைப்பில் சிறப்பு கவனம் செலுத்துவது முக்கியம்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு படைப்பாற்றல் மேம்படும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள ஆர்வம் பிறக்கும். புதிய திட்டங்களைத் தொடங்க நல்ல காலம். தனிப்பட்ட முயற்சிகளில் வேலை செய்ய இதுவே சரியான நேரம். கலை, எழுத்து, பேச்சுத்துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல காலம். உங்களுடைய பேச்சு தொழில் கூட்டாளர்களை ஈர்க்கும் படி இருக்கும். உங்கள்ன் செயல்பாடுகள் சமூகத்தில் மதிப்பையும், மரியாதையும் கொண்டு வரும். சிலருக்கு காதல் உறவுகள் கைக்கூடும். நகைச்சுவை நிறைந்த காதல் துணையை நீங்கள் சந்திப்பீர்கள். ஆரோக்கியமாக சாப்பிடுங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிருங்கள்.
கடகம்
கடகம் ராசிக்காரர்கள் குடும்ப உறவுகளின் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டம் இது. உணர்ச்சிகளில் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் இது. பணியிடங்களில் மிக கவனமாக செயல்பட வேண்டும். உங்கள் பணிச்சுமைகள் தனிப்பட்ட வாழ்கையை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். சொத்து வாங்க அல்லது விற்க சரியான நேரம் இது. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வரன்கள் கைக்கூடும்.
சிம்மம்
சிம்மம் ராசிக்கார்களுக்கு மக்களுடன் பழகுவதற்கும் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கும் இதுவே நேரம். தொழில் ரீதியான பயணங்கள் ஏற்படும். தகவல் தொடர்பு, ஊடகம், விளம்பரம், வாடிக்கையாளர் உறவுகள் சம்பந்தப்பட்ட பணிகளில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் அமையும். தொழில்நுட்பம், சமூக ஊடகம், மேடை பேச்சு சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் உங்கள் செயல்களுக்கு துணையாக இருப்பார்கள்.
கன்னி
கன்னி ராசிக்கார்களுக்கு நிதிசார்ந்த பலனை புதன் பெயர்ச்சி அளிக்கும். வரவு, செலவு கணக்குகளில் கவனம் செலுத்துவீர்கள். பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகளை தேடுவீர்கள். உங்கள் இலக்குகளை தெளிவாக நிர்ணயம் செய்வீர்கள். பணியில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு உண்டாகும். வணிகம் சார்ந்த வாய்ப்புகள் விரிவடையும்,
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
