புதன் பெயர்ச்சி! துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்!
வியாபாரம், நுண்ணறிவு, கல்வி, புத்திசாலித்தனம், பேச்சுத்திறன் ஆகியவற்றின் காரகத்துவம் பெற்ற கிரகம் ஆக புதன் பகவான் உள்ளார். புதன் பகவான் துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகும் நிலையில் மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிக்காரர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ஏற்றங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

வியாபாரம், நுண்ணறிவு, கல்வி, புத்திசாலித்தனம், பேச்சுத்திறன் ஆகியவற்றின் காரகத்துவம் பெற்ற கிரகம் ஆக புதன் பகவான் உள்ளார். புதன் பகவான் துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகும் நிலையில் மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிக்காரர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ஏற்றங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 19, 2025 02:08 PMகேது பெயர்ச்சி பலன்கள்: இனி 3 ராசிகள் மீது பண மூட்டைகள் விழும்.. கேது ஆட்டம் ஆரம்பம்.. உங்க ராசி என்ன சொல்லுங்க?
Apr 19, 2025 01:29 PM62 ஆண்டுகளுக்கு பின் இன்று பாரிஜாத யோகம்.. எந்த 3 ராசிகளுக்கு எதிர்பாராத பலன்கள் கிடைக்கும் பாருங்க!
Apr 19, 2025 07:00 AMகுபேர ராசிகள்: 4 ராஜ யோகங்கள்.. 3 குபேரன் ராசிகள்.. அக்ஷய திருதியை நாளில் லட்சுமி தேவி பண மழை.. உங்க ராசி என்ன?
Apr 19, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : 19 ஏப்ரல் 2025 மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 18, 2025 01:26 PM'வியாபாரத்தில் நஷ்டம், வாழ்க்கைத்துணையுடன் மோதலுக்கு வாய்ப்பு': ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டம்பெறும் ராசிகள்
Apr 18, 2025 01:20 PMராகு பெயர்ச்சி பலன்கள்: பணமழை கொட்டும் ராகு.. அதிர்ஷ்டமான ராசிகள்.. கும்பத்தில் யோகம் பிறக்குது!
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் கூடும். உங்கள் தோற்றங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். உங்கள் ஆளுமை மேம்பாடு அடையும். உங்கள் நுண்ணறிவு சிந்தனை மேம்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கும். புதிய தொழில் முனைவோர்களுக்கு நல்ல காலம் இது. காதல் வாழ்கை சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு போட்டித் தேர்வுகளில் வெற்றிகள் கிடைக்கும். ஆழ்ந்து சிந்தனை செய்து வெற்றிகளை குவிப்பீர்கள். உங்கள் பணியிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதைகள் கூடும். சிலருக்கு மேலதிகாரிகள் உடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். கடன் உள்ளிட்ட பாக்கித் தொகைகளை செலுத்துவது நல்லது. திருமண வரன் தேடுபவர்களுக்கு திருமணம் கைக்கூடும். காதல் துணை கிடக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு நிதிசார்ந்த நன்மைகளை ஏற்படுத்தும் காலமாக இது அமையும். உங்கள் கனவுகளை நோக்கிய பயணத்தை விரிவு செய்வீர்கள். பயணத்தின் போது, பாதுகாப்புடன் செயல்படுவது முக்கியம். நீண்ட கால திட்டங்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் ஏற்படும். காதல் துணையை தேடுபவர்கள் அன்புக்கு உரியவர்களை சந்திப்பீர்கள். காதல் உறவுகளில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி கூடும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு மற்றும் தலைமை பதவிகள் தேடி வரும். பணியிடங்களில் பொறுப்புகள் கூடும். உங்கள் தலைமையில் அலுவலக கூட்டங்களை நடத்த வேண்டி வரும். பணியிடத்தில் உங்கள் தகவல் தொடர்பு திறன் மேம்படும். தொழில் மாற்றம் குறித்த சிந்தனை விரிவடையும். எலும்புகள், தோல், மூட்டுகள் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளை கவனியுங்கள்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்கள் புதிய விஷயங்களை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். குறிப்பிட்ட துறை சார்ந்த விவகாரங்களில் உங்கள் நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்வீர்கள். உங்கள் பேச்சுத்திறன் வாடிக்கையாளர்களை கவரும். விபாயாரம் விரிவடைந்து லாபம் பெற்றுத் தரும். புதிய தொடர்புகளை உருவாக்க இது ஒரு நல்ல காலம். உங்களின் திறன்களை கண்டு சக பணியாளர்கள் வியப்பார்கள்.
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு பணியிடம் குறித்த சிந்தனை அதிகரிக்கும். அலுவலக ரகசியங்களை மிக கவனமாக கையாளுங்கள். நிதி விவகாரங்களில் சிக்கல்கள் உண்டாகலாம். சக ஊழியர்களுடன் நட்புறவை மேம்படுத்துவீர்கள். சொத்து தொடர்பான பிரச்னைகள் தீரும். புதிய முதலீடுகள் குறித்து சிந்திப்பீர்கள். மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
