Lord Sun Yoga: இனிமே உங்கள ஒன்னும் பண்ண முடியாது.. சூரியன் ராசிகள் நீங்கதான்.. சுக்கிரன் ஏற்றுக்கொண்டார்-here we will see about the zodiac signs that are going to enjoy the lord sun yoga - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Sun Yoga: இனிமே உங்கள ஒன்னும் பண்ண முடியாது.. சூரியன் ராசிகள் நீங்கதான்.. சுக்கிரன் ஏற்றுக்கொண்டார்

Lord Sun Yoga: இனிமே உங்கள ஒன்னும் பண்ண முடியாது.. சூரியன் ராசிகள் நீங்கதான்.. சுக்கிரன் ஏற்றுக்கொண்டார்

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 12, 2024 03:12 PM IST

Lord Sun Yoga: சுக்கிரனின் நட்சத்திரத்தில் சூரியன் நுழைகின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர்.

Lord Sun Yoga: இனிமே உங்கள ஒன்னும் பண்ண முடியாது.. சூரியன் ராசிகள் நீங்கதான்.. சுக்கிரன் ஏற்றுக்கொண்டார்
Lord Sun Yoga: இனிமே உங்கள ஒன்னும் பண்ண முடியாது.. சூரியன் ராசிகள் நீங்கதான்.. சுக்கிரன் ஏற்றுக்கொண்டார்

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் நாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் தன்னம்பிக்கை, சொகுசு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி அன்று சூரிய பகவான் பூர நட்சத்திரத்தில் நுழைகின்றார். இது சுக்கிர பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும். சுக்கிரனின் நட்சத்திரத்தில் சூரியன் நுழைகின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர்.

மேஷ ராசி

சூரிய பகவானின் நட்சத்திர இடம் மற்றும் உங்களுக்கு அனைத்து விதமான ஆடம்பர வாழ்க்கைகளையும் கொடுக்கும். வேலை உங்களுக்கு சாதகமாக அமையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பொது வேலை உங்களுக்கு தேடி வரும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். 

அதிக சம்பளம் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். நிதி நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். லாபம் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிகரிக்க கூடும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

சிம்ம ராசி

சூரியன் பூரம் நட்சத்திரத்தில் நுழைவதால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கப் போகின்றது. பொருளாதாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் உங்களுக்கு உற்சாகம் மற்றும் ஆடம்பரம் அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் நல்ல பெயர் உங்களுக்கு கிடைக்கும். 

உங்கள் வாழ்க்கை முறையில் நேர்மறையான மாற்றங்கள் நிகழும். பேச்சுத் திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். வணிகத்தில் வெற்றி கிடைக்கும். சிறந்த உறவு முறை உங்களுக்குள் உண்டாகும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

கன்னி ராசி

சூரிய பகவானின் பூரம் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வாழ்வில் மகிழ்ச்சி அதிகப்படுத்தி கொடுக்கும். விருப்பங்கள் அனைத்தும் உங்களுக்கும் நிறைவேறும். தடைகள் அனைத்தும் உங்களை விட்டு விலகும். மரியாதை அதிகரிக்கப்படும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்காலத்தில் முன்னேற்றம் தரக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு தற்போது அமையும். 

தனி அடையாளம் உங்களுக்கு கிடைக்கும். வெற்றி பெறுபவர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலையில்லாதவர்களுக்கு அரசு வேலைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner