Surya Peyarchi: கன்னி ராசியில் நுழையும் சூரியன்..பண மழையில் நனையப் போகும் 6 ராசிகள் யார்? - விபரம் உள்ளே!-these zodiac signs gets financial benefits due to sun enter in virgo on 16th september 2024 - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Surya Peyarchi: கன்னி ராசியில் நுழையும் சூரியன்..பண மழையில் நனையப் போகும் 6 ராசிகள் யார்? - விபரம் உள்ளே!

Surya Peyarchi: கன்னி ராசியில் நுழையும் சூரியன்..பண மழையில் நனையப் போகும் 6 ராசிகள் யார்? - விபரம் உள்ளே!

Karthikeyan S HT Tamil
Sep 11, 2024 12:40 PM IST

Surya Peyarchi: சூரியன் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் இருக்கும். அந்த வகையில் வரும் 16 ஆம் தேதி சூரியன் கன்னி ராசியில் நுழைகிறார். இதனால் நற்பலன்களை பெறப்போகும் ராசிகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

Surya Peyarchi: கன்னி ராசியில் நுழையும் சூரியன்..பண மழையில் நனையப் போகும் 6 ராசிகள் யார்? - விபரம் உள்ளே!
Surya Peyarchi: கன்னி ராசியில் நுழையும் சூரியன்..பண மழையில் நனையப் போகும் 6 ராசிகள் யார்? - விபரம் உள்ளே!

செப்டம்பர் 16ல் கன்னி ராசியில் நுழைகிறார். சூரியன் கன்னி ராசியில் நுழையும் நாளை 'கன்யா சங்கமணம்' என்றும் சொல்வார்கள். இது சில ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். சூரியனின் இந்த பெயர்ச்சியால் சிம்மம் உள்ளிட்ட சில ராசிகளுக்கு பொருளாதார நன்மைகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளன. சூரிய பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்

சூரியனின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். தைரியத்துடனும் உற்சாகத்துடனும் பணியாற்றுவீர்கள். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக முதலீடு செய்வீர்கள். பண வரவு அதிகரிக்கும். பிரச்சினைகள் ஓரளவுக்கு தீரும்.

மிதுனம்

சூரிய பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மைகளை கொண்டு வந்துள்ளது. தாயாரின் உடல் நலத்தில் அக்கறை தேவை. கௌரவம், புகழ், மகிழ்ச்சி, செல்வம் ஆகியவை இருக்கும். செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கடன்களை அடைப்பீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும், உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கிடைக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சமூகத்தில் பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. யோகா செய்யுங்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு 2ம் வீட்டில் சூரியன் இருக்கிறார். செல்வமும் குடும்பமும் செழிக்கும், குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும், சில ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

இந்த சூரிய பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நிறைய நன்மைகள் உள்ளன. ஆர்வத்துடன் உழைத்து அதில் வெற்றி பெறுங்கள். சூரியன் இந்த ராசியின் 11 வது வீட்டில் இருப்பது உங்களுக்கு சிறந்த பலன்களைத் தரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மீதமுள்ள தொகை திரும்பி வர வாய்ப்புள்ளது.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் சூரியனின் பெயர்ச்சியால் நிறைய பணம் பெறுவார்கள். புதிய கடன் வாங்குவீர்கள். சொத்து வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். 9 மற்றும் 10 வது வீட்டில் உள்ளவர்கள் தர்மகர்மாதிபதி யோகா காரணமாக வாழ்க்கையில் முன்னேற வாய்ப்புள்ளது. பண வரவு அதிகரிக்கும். கஷ்டங்கள் நீங்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்