செவ்வாய் ராசிபலன்.. தலைகீழாக மாறப் போகும் ராசிகள்.. கடகத்தில் விளையாட்டு ஆரம்பம்.. சிக்கியது யார்?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  செவ்வாய் ராசிபலன்.. தலைகீழாக மாறப் போகும் ராசிகள்.. கடகத்தில் விளையாட்டு ஆரம்பம்.. சிக்கியது யார்?

செவ்வாய் ராசிபலன்.. தலைகீழாக மாறப் போகும் ராசிகள்.. கடகத்தில் விளையாட்டு ஆரம்பம்.. சிக்கியது யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 16, 2024 09:47 AM IST

Lord Mars: செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

செவ்வாய் ராசிபலன்.. தலைகீழாக மாறப் போகும் ராசிகள்.. கடகத்தில் விளையாட்டு ஆரம்பம்.. சிக்கியது யார்?
செவ்வாய் ராசிபலன்.. தலைகீழாக மாறப் போகும் ராசிகள்.. கடகத்தில் விளையாட்டு ஆரம்பம்.. சிக்கியது யார்?

செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் கோபக்கார கடவுளாக கருதப்படுகிறார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி இன்று செவ்வாய் பகவான் கடக ராசிக்குள் நுழைந்தார். செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மிதுன ராசி

செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் உங்களுக்கு அதிர்ஷ்ட காலமாக அமைந்துள்ளது. பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். இந்த காலகட்டத்தில் எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு நிதி ஆதாயம் கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். உடன் பிறந்தவர்களால் உதவி கிடைக்கும். நண்பர்களால் உங்களுக்கு முழு ஒத்துழைப்பும் கிடைக்கும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

தொழிலை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும்.

விருச்சிக ராசி

செவ்வாய் பகவானின் கடக ராசி சஞ்சாரம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுத்து வருகிறது. உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். அதனால் உங்களுக்கு நல்ல காலம் தொடங்கி விட்டது. அனைத்து முயற்சிகளும் வெற்றியாக அமையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். 

புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வெளியூர் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். இந்த காலகட்டத்தில் வியாபாரம் உங்களுக்கு பெரிய லாபத்தை பெற்று தரும். வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

துலாம் ராசி

செவ்வாய் பகவானின் கடக ராசி பயணம் உங்களுக்கு மங்கள யோகத்தை பெற்றுத்தரப் போகின்றது. கர்ம பாவத்திலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். இந்த காலகட்டத்தில் வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க கூடும். 

வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வணிகத்தில் அடுத்த உயரம் செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய திட்டங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பற்றி தரும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner