துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினருக்கான செவ்வாய் வக்ர பெயர்ச்சி பலன்கள்!
மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளின் அதிபதியான செவ்வாய் பகவான் மகரம் ராசியில் உச்சமும், கடகம் ராசியில் நீசமும் அடைவார்.
நவக்கிரகங்களின் தளபதி என்று செவ்வாய் பகவான் அழைக்கப்படுகிறார். ஆற்றல், சகோதரன், நிலம், வலிமை, தைரியம், வீரியம், வீரம் ஆகிய பண்புகளுக்கு காரகத்துவம் பெற கிரகம் செவ்வாய் ஆவார்.
மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளின் அதிபதியான செவ்வாய் பகவான் மகரம் ராசியில் உச்சமும், கடகம் ராசியில் நீசமும் அடைவார்.
வரும் டிசம்பர் 7 ஆம் தேதி கடக ராசியில் வக்ர நிலை அடையும் செவ்வாய் பகவான் பின்னோக்கி நகர்வார். கடகத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால், 12 ராசிகளுக்கும் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பலன்கள் உண்டாகும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனும் கிடைக்கும்.
துலாம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கு செவ்வாய் வக்ர பெயர்ச்சி பலன்கள்
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை பெருகும். ஆனால் பொறுமையின்மை இருக்கும். செயல்களில் நிதானத்தை கடைப்பிடிக்க முயலுங்கள். மன அமைதியைப் பேண முயற்சி செய்யுங்கள். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை கூடும். ஆனால் மனதில் குழப்பம் ஏற்படலாம். பொறுமையைக் கடைப்பிடியுங்கள். கலை அல்லது இசை மீதான ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் உணர்ச்சிகளையும் கட்டுக்குள் வைத்திருங்கள். வியாபாரத்தில் சலசலப்பு அதிகமாக இருக்கும். குடும்பத்தில் நிதானமான அணுகுமுறையை கடைப்பிடிக்கவும். செயல்களில் கவனம் தேவை. புதிய முதலீடுகளில் கவனம் தேவை.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு நிலம் சார்ந்த அனுகூலங்கள் உண்டாகும். வீடு, மனை வாங்கும் போது கவனம் உடன் செயல்படவும். மனதில் தன்னம்பிக்கை இருந்தாலும், சில நேரங்களில் மனம் கலங்கலாம். குடும்பத்துடன் ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களுக்கு மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நிலம், விவசாயம், வீடு, சார்ந்த முதலீடுகள் லாபம் கொடுக்கும். ரியல் எஸ்டேட் துறைகளில் இருப்பவர்களுக்கு வருமானம் கூடும். தைரியத்துடன் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். கல்விப் பணிகளில் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மரியாதை கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தாயின் அனுகூலம் கிடைக்கும்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்களுக்கு மனதில் நம்பிக்கை மற்றும் விரக்தி உணர்வுகள் இருக்கலாம். சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள். மன அமைதிக்கு முயற்சி செய்யுங்கள். கல்விப் பணிகளில் வெற்றி கிடைக்கும். அரசாங்கத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும்.
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு மனம் அமைதியாக இருக்கும். செயல்பாடுகளில் பொறுமை காக்கவும். தேவையில்லாத கோபம் மற்றும் வாக்குவாதத்தை தவிர்க்கவும். உரையாடலில் சமநிலையையும் பேணுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமாக இருக்கவும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டு.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.