தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Temple Worship: இந்த மண் போதும் - எந்த சிக்கலும் அருகிலேயே வராது!

Temple Worship: இந்த மண் போதும் - எந்த சிக்கலும் அருகிலேயே வராது!

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 07, 2023 12:41 PM IST

தீராத துன்பங்களை போக்கக்கூடிய குலதெய்வ வழிபாடு குறித்து இங்கே காண்போம்.

குலதெய்வ வழிபாடு
குலதெய்வ வழிபாடு

அப்படிப்பட்ட குலதெய்வ வழிபாடுகளில் ஒன்று தான் குலதெய்வ மண் வழிபாடு. குடும்பத்தில் தீராத துன்பங்கள் இருந்தால் இந்த பரிகாரத்தைச் செய்து அதிலிருந்து விடுபடலாம்.

குடும்பத்தோடு குல தெய்வ வழிபாடு செய்து விட்டு, குலதெய்வ கோயிலில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும். குடும்பத் தலைவன் ஒரு பிடி மண், குடும்பத் தலைவி ஒரு கைப்பிடி மண் எடுத்துக் கொண்டு இரண்டையும் சேர்த்து ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் பூஜை அறையில் சுத்தம் செய்துவிட்டு அதில் வைத்து விட வேண்டும். அந்த மண்ணோடு சிறிதளவு மஞ்சள் துளை சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய செப்பு தகட்டில் உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை எழுதி அந்த தகட்டை மண்ணோடு வைத்து மஞ்சள் துணியில் முடிந்து வீட்டின் பத்திரமான ஒரு பகுதியில் அதை வைத்துவிட வேண்டும்.

குறிப்பாக அந்தப் பை யார் கையிலும் கிடைக்கக் கூடாத அளவிற்குப் பத்திரமாக வைக்க வேண்டும். ஆணி அடித்து ஒரு பக்கமாக மாட்டி வைத்தால் கூட போதும். தினமும் விளக்கு ஏற்றி ஊதுபத்தி காட்டும் பொழுது அந்த மண்ணுக்கும் காட்ட வேண்டும் அவ்வளவுதான்.

ஆண்டிற்கு ஒரு முறை குலதெய்வ கோயிலுக்குச் செல்லும் போது புதிய மண்ணை எடுத்துக்கொண்டு வரவேண்டும். பழைய மண்ணை வீட்டின் உள்ளேயே மண் இருக்கக்கூடிய இடத்திலேயோ அல்லது வீட்டின் அருகிலேயே யாரும் நடமாடாத இடத்தில் மண்ணோடு கலந்து விட வேண்டும்.

இந்த மண்ணில் குலதெய்வமே வாழ்வதாகக் கூறப்படுகிறது. மேலும் உங்களுடைய முன்னோர்கள் கால் தடம் பட்ட மண் என்பதால் அடுத்தடுத்து வரும் சந்ததியர்கள் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைவார்கள் எனக் கூறப்படுகிறது. இப்படி அந்த மண்ணை உங்கள் வீட்டில் வைத்திருந்தால் குலதெய்வமே உங்கள் வீட்டில் வாழ்வதாகக் கூறப்படுகிறது.

நமது குடும்பத்தைத் துன்பத்திலிருந்து காப்பாற்றக்கூடியது முதலில் குலதெய்வம் தான். அப்படிப்பட்ட குலதெய்வ வழிபாட்டைத் தினம் தினம் செய்வது மிகவும் அவசியமாகும். அப்படி வழிபாடு செய்யும்போது குலதெய்வத்தின் பெயரைச் சொல்லி நீங்கள் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும் எனக் கூற வேண்டும்.

குடும்பத்தைக் காப்பாற்றக்கூடிய குலதெய்வத்தின் பெயரை ஒருநாள் தினசரி தவறாமல் உச்சரிக்க வேண்டும். குறிப்பாகப் பெண்கள் மட்டும் தான் இப்படி குலதெய்வத்தை நினைவு கூறி வழிபாடு செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. எல்லோரும் குலதெய்வ வழிபாடு செய்தால் அனைத்தும் நன்மையாகத் தொடங்கும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்