தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Shirdi Sai Baba: கவலை வேண்டாம் நான் இருக்கிறேன் - சாய்பாபா பொன்மொழிகள்!

Shirdi Sai Baba: கவலை வேண்டாம் நான் இருக்கிறேன் - சாய்பாபா பொன்மொழிகள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 22, 2023 12:40 PM IST

மகான் சாய்பாபா பக்தர்களுக்கு உரைத்த பொன்மொழிகள் குறித்து இங்கே காண்போம்.

மகான் சாய்பாபா
மகான் சாய்பாபா

அன்பிற்கினிய குழந்தைகளே, இந்த வாழ்க்கை மிகவும் அற்பமானது என எண்ண வேண்டாம். மிகவும் அரிதானது இந்த வாழ்க்கை. மிகவும் அர்த்தமுள்ளதாக இந்த வாழ்க்கை பயணத்தை நான் அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த பயணத்தில் நீங்கள் தேர்ந்தெடுத்த பாதை, உங்களுடைய தேர்வு கிடையாது.

உங்களுக்கான பாதையையும், அதன் வாழ்க்கை முறையையும், அதற்கான செயல்களையும் நீங்கள் தேர்வு செய்யவில்லை. நீங்கள் செயல்படுவதும் உங்களுடையது இல்லை. இவை அனைத்தும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும்.

அவ்வாறு தீர்மானிக்கப்பட்ட வழியில் தான் நீங்கள் சென்று கொண்டிருக்கிறீர்கள். ஏற்கனவே உங்களது வாழ்க்கை தீர்மானிக்கப்பட்டது என்பதை உணர்ந்து புரிந்து கொண்டால், உங்களது வாழ்க்கையில் எதை நீங்கள் செய்ய வேண்டும் என்பதில் தெளிவு கிடைத்துவிடும்.

அப்படி உங்களுக்கு நோக்கத்தில் தெளிவு வந்து விட்டால், வாழ்க்கை உன்னதமானதாக மாறிவிடும் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். ஆனால் இதனை யாரும் புரிந்து கொள்வதில்லை. சக்தியின் உன்னதங்களைத் தெரிந்து கொள்ள யாரும் விரும்பவில்லை.

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட உங்களது வாழ்க்கையில் ஈடுபள்ளங்கள் வரலாம். நிறை மற்றும் குறைகள் இருக்கலாம். கஷ்டம் மற்றும் நஷ்டங்கள் வந்து செல்லலாம். உண்மையில் சொல்லப் போனால் இந்த உலகம் யுத்த களம் போல் காட்சியளிக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்.

கவலை வேண்டாம். உங்களது வாழ்க்கையை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். உங்கள் வாழ்க்கையின் பயணத்தில் ஏற்படக்கூடிய அனைத்து கவலைகளையும் நான் எடுத்துக் கொள்கிறேன். உங்கள் பயணத்தை நான் இலகுவாக மாற்றித் தருகிறேன்.

உங்களுடைய தகப்பனாய் நான் இருக்கும் எதற்கும் கவலைப்பட வேண்டாம். எதைக் கண்டும் அச்சம் கொள்ள வேண்டாம். என் திருநாமத்தை யாரெல்லாம் கூறுகிறார்களோ அவர்களுக்கு அருகில் நான் வந்து விடுவேன்.

உங்கள் அனைவரையும் நான் ஒரு பெற்றோர் போல் காப்பேன். என் இதயத்தைக் கருவறையாக வைத்து அதில் உங்களை அமர வைத்துப் பேணி காப்பேன்.

இவ்வாறு கூறியிருக்கும் பகவான் சாய்பாபாவின் பொன் மொழிகளை ஏற்று அவர் திருநாமத்தைக் கூறி பயம் இல்லாமல் வாழ்க்கையில் நடத்துவோமாக.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்