மிதுன ராசி புத்தாண்டு 2025 ராசிபலன்: குரு வந்த பிறகு கனவு நனவாகும்.. ஆரம்பமே அசத்தல் போல.. என்ன நடக்குமோ தெரியல!
Rasi Palan 2025: இந்த 2025 ஆம் ஆண்டு பல பெரிய கிரகங்களின் இடமாற்றங்கள் நிகழ உள்ளன. இதனால் 12 ராசிகளுக்கும் கலமையான பலன்கள் கிடைக்கப் போகின்றது. மிதுன ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு 2025 எப்படி இருக்கும் என்பது குறித்து இங்கு காணலாம்.
Rasi Palan 2025: புத்தாண்டு என்றாலே கொண்டாட்டம். தொடக்கத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வரும் காலங்களில் சிக்கலான சூழ்நிலைகளை பல ராசிக்காரர்கள் பெறுகின்றனர். தொடக்கத்தில் இருந்தது போலவே இறுதிவரை சில ராசிக்காரர்கள் மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர்.
ஒவ்வொரு புத்தாண்டும் தொடங்கும் பொழுதும் இந்த ஆண்டு நமக்கு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதை பலரது எண்ணமாக இருக்கும். ஆனால் நவகிரகங்கள் எப்படி செயல்படுகின்றார்களோ அதனைப் பொறுத்துதான் 12 ராசிகளுக்கும் பலன்கள் இருக்கும்.
தற்போது இந்த 2025 ஆம் ஆண்டு பிறக்கும் பொழுது இந்த ஆண்டு நமக்கு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் நோக்கம். இந்த 2025 ஆம் ஆண்டு பல பெரிய கிரகங்களின் இடமாற்றங்கள் நிகழ உள்ளன. இதனால் 12 ராசிகளுக்கும் கலமையான பலன்கள் கிடைக்கப் போகின்றது. மிதுன ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு 2025 எப்படி இருக்கும் என்பது குறித்து இங்கு காணலாம்.
2025 இல் முக்கிய கிரகங்கள்
இந்த 2025 ஆம் ஆண்டு ஆரம்ப காலகட்டத்தில் குரு பகவான் ரிஷப ராசியிலும் செவ்வாய் பகவான் வக்கிர நிலையில் கடக ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும், சூரிய பகவான் தனுசு ராசியிலும், சந்திரன் மற்றும் புதன் ஆகிய இரண்டு கிரகங்களும் தனுசு ராசியிலும், சனி பகவான் கும்ப ராசியிலும், ராகு பகவான் மீன ராசியிலும் சஞ்சாரத்தை மேற்கொள்கின்றனர். இதனைப் பொறுத்து உங்களுக்கு பலன்கள் தொடங்கும்.
பொது பலன்கள்
மிதுன ராசிக்காரர்களான நீங்கள் சொல் மற்றும் செயல் மூலம் தங்களை இயல்பாக நிலைப்படுத்திக் கொள்ளக் கூடியவர்கள். புத்திசாலித்தனத்தால் கிடைக்கக்கூடிய அனுபவத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள் நீங்கள். இந்த காலகட்டத்தில் அனைவரையும் பக்குவமாக அரவணைத்து பயணம் செய்தால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும்.
இந்த ஆண்டு குரு பகவான் உங்கள் ராசியில் நுழைகின்ற காரணத்தினால் அவருடைய அனைத்து ஆசிர்வாதங்களும் உங்களுக்கு கிடைக்கும். பெற்றோர்களின் சொந்தங்களால் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
உங்கள் திறமையை முழுமையாக நிரூபிக்க வேண்டிய வாய்ப்புகள் தேடி வரும். பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். குலதெய்வ வழிபாடு உங்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை பெற்று தரும். பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு எப்போதும் இருக்கும்.
கல்வி, திருமண வாழ்க்கை
இந்த ஆண்டில் உங்களது செயலில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. புதிய தொழில் மற்றும் வியாபாரத்தை தொடங்குவதற்கு முன்னேற்ற காலமாக இது அமையும். திருமண வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
பெற்றோரின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள் எதிர் பார்த்து காத்திருந்த வெற்றி உங்களை தேடி வரும். படிப்பிற்காக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். உள்ளது உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். போட்டிகளில் மாணவர்கள் வெற்றியை காண்பார்கள்.
வேலை மற்றும் தொழில்
இந்த ஆண்டு உங்களுக்கு அனைத்தும் வெற்றியாக அமையும். தொழில் சம்பந்தப்பட்ட மற்றும் வேலை சம்பந்தப்பட்ட பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும் வேலைக்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் புதிய வாய்ப்புகளை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டால் முன்னேற்றம் கிடைக்கும் செய்யும் வேலையில் அதிக கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.