தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Zodiac Signs That Are Going To Be Lucky Due To The Rising Of Mercury

Budhan Peyarchi 2024: புதன் விளையாடத் தொடங்கினார்.. உதயத்தில் கொட்டும் பணமழை.. அதிர்ஷ்டக்கார ராசிகள் யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 18, 2024 11:50 AM IST

Budhan Peyarchi 2024: அஸ்தமன நிலையில் பயணம் செய்து வந்த புதன் பகவான் கடந்த மார்ச் 15ஆம் தேதி அன்று மீன ராசியில் உதயமானார். அதே நிலையில் சனிபகவானின் கும்ப ராசியில் நுழைகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜ வாழ்க்கையை பெற்றுள்ளனர்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

அதன் காரணமாக அவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நட்சத்திர இடமாற்றம், அஸ்தமனம், உதயம், வக்ர நிவர்த்தி, வக்ர பெயர்ச்சி என அனைத்து செயல்பாடுகளும் மிகவும் முக்கியமானதாகும்.

அஸ்தமன நிலையில் பயணம் செய்து வந்த புதன் பகவான் கடந்த மார்ச் 15ஆம் தேதி அன்று மீன ராசியில் உதயமானார். அதே நிலையில் சனிபகவானின் கும்ப ராசியில் நுழைகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜ வாழ்க்கையை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம் ராசி

 

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் நிம்மதி அனைத்தும் கிடைக்கும். புதிதாக வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தடைப்பட்டு கடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக முடிவடையும்.

கன்னி ராசி

 

புதன் பகவானின் உதயத்தால் உங்களுக்கு சிறப்பான காலம் அமைந்துள்ளது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

ரிஷப ராசி

 

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு பணவரவை கொடுக்கப் போகின்றது. பொருளாதார நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். காதல் வாழ்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். பல்வேறு விதமான நன்மைகள் உங்களைத் தேடி வரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

மேஷ ராசி

 

புதன் பகவானின் உதயம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும். மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கக்கூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். தற்போது நடந்து கொண்டிருக்கின்ற காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக அமையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

WhatsApp channel