தமிழ் செய்திகள்  /  Astrology  /  Mercury Retrograde Transits The Signs That Live Like A King

Mercury Retrograde Transit: வக்ர நிலையில் பெயரும் புதன் பகவான்.. ராஜாவாகும் ராசிகள்!

Marimuthu M HT Tamil
Mar 10, 2024 05:55 PM IST

Mercury Retrograde Transit:புதன் வக்ர நிலையில் பெயர்ச்சி அடைவதால் சிறந்த வாழ்வு வாழப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

புதன் பகவான்.
புதன் பகவான்.

ட்ரெண்டிங் செய்திகள்

இத்தகைய நற்பண்புகளைப் பெற்றிருக்கும் புதன் பகவான், கோபமாகி வக்ரமாகப் பெயரும்போதும் ஒரு இடத்தில் மறைவு ஸ்தானமான அஸ்தமன ஸ்தானத்தில் இருக்கும்போதும், பிறக்கும் ஸ்தானத்தில் இருக்கும்போதும் எதிர்மறைப் பாதிப்பினை உண்டாக்கலாம்.

அதன்படி, வரும் ஏப்ரல் இரண்டாம் தேதி, அதிகாலை 3 மணி 18 நிமிடங்களுக்கு, புதன் பகவான் மேஷ ராசியில் இருந்து வக்ரப் பெயர்ச்சி அடைந்து திரிந்துபோகிறார்.

புதன் வக்ரநிலை அடைவது என்பது என்ன?

மேஷராசியில் புதன் வக்ர பெயர்ச்சி அடைவதால், சில ராசியினர் தைரியம், தன்னம்பிக்கையைப் பெறுவர். புதனின் வக்ரப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

சிம்ம ராசி: இந்த ராசியில், புதன் ஒன்பதாம் இடத்தில் வக்ர நிலையை எட்டுகிறார். ஆகையால், தொழிலில் இருந்த சுணக்கம் நீங்கும். வெகுநாட்களாக சரியான வேலையில்லாதவர்களுக்கு பணி கிடைக்கும். அயல்நாட்டில் பணி செய்யும் யோகம் வாய்க்கும். சைடு பிசினஸை செய்வீர்கள். இறைநம்பிக்கை அதிகரிக்கும். எதிர்காலத்தேவைக்கான நல்ல முடிவுகளைப் பெறுவீர்கள். உங்கள் படைப்பாற்றல் அதிகரிக்கும் மற்றும் கலை, இசை மற்றும் கவிதை மூலம் நீங்கள் நல்ல புகழை அடைவீர்கள். நீங்களும் உங்கள் நண்பருடன் இணைந்து சில ஆக்கப்பூர்வமான வேலைகளைச் செய்யலாம். தொழில்கள் மற்றும் வணிகங்களுடன் தொடர்புடையவர்களும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் பங்கேற்கலாம். இது உங்கள் வேலை மன அழுத்தத்திலிருந்து உங்களை விடுவிக்கலாம்.

தனுசு ராசி: இந்த ராசியில்,புதன் ஏழாவது இடத்தில் வக்ர நிலையில் இருக்கிறார். அப்போது தனுசு ராசியினர் பணியில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். பணி தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ளலாம். தனுசு ராசியினர் தொழிலில் எச்சரிக்கையாக இருந்தல் நல்லது. தொழில் முனைவோர், இனிமையான பேச்சுகளால் பல ஆர்டர்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை பெருகும். குல தெய்வ கோயிலுக்குச் சென்று வருவீர்கள்.ஆடைகள், நகைகள் போன்ற விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் நாட்டம் காட்டுவீர்கள். உங்கள் நடையில் மாற்றம் இருக்கலாம். உங்கள் நடத்தையில் நீங்கள் அதிக நம்பிக்கையுடன் இருப்பீர்கள், மேலும் உங்கள் மென்மையான பக்கத்தை மற்றவர்களுக்கு முன்னால் காண்பிப்பீர்கள். வேலையில், எல்லோரும் உங்களைப் பாராட்டுவார்கள், உங்களுக்கு உதவ எப்போதும் இருப்பார்கள். வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் வணிகம் மிகப்பெரிய அளவில் வளரும், மேலும் நீங்கள் சிறந்த லாபத்தை அனுபவிப்பீர்கள்.

கும்பராசி: இந்த ராசியினரின், ஐந்தாம் இடத்தில், புதன் வக்ர நிலை அடைந்து இருப்பதால் வியாபாரம் செய்பவர்களுக்கு மிதமிஞ்சிய வெற்றியைப் பெறுவீர்கள். ஊதிய உயர்வு எதிர்பார்த்த அளவு கிடைக்கும். அயல்நாடு நிறுவனங்கள் மூலம் நல்ல சம்பளத்தில் புதிய வேலை கிடைக்கலாம். வங்கியில் இருப்பு பழைய கணக்கை விட சற்று அதிகமாக இருக்கும். திருமணம் அமையாமல் காலதாமதம் ஆகும் கும்பராசியினருக்கு இந்த காலத்தில், நிச்சயம் வரன் அமையும். வீட்டில் இருந்த அத்தனை சிக்கல்களும் மறையும். வேலையில், உங்கள் சக ஊழியர்கள் மற்றும் முதலாளி மிகவும் ஆதரவாக இருப்பார்கள். அவை உங்கள் இலக்குகளை அடைய உதவும். உங்கள் கனவுகளை நெருங்குவதற்கு மூத்தவர்களிடமிருந்து மிகச் சிறந்த மற்றும் மதிப்புமிக்க ஆலோசனைகளைப் பெறலாம். வணிகத் துறையில், நீங்கள் நீண்ட காலமாக பெற முயற்சித்த அந்த ஒப்பந்தங்களைப் பெற முடியும். உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் நன்றாக இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்