தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here We Will Find The Rasis In Which Mars And Venus Are Going To Give Mahalakshmi Yoga

அடிதடியாக சேர்ந்த செவ்வாய் சுக்கிரன்.. மகாலட்சுமி யோகம் உருவானது.. 3 ராசிகளுக்கு பணமழை

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 17, 2024 04:14 PM IST

Mahalakshmi Yoga: செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்த காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் பணவரவை அதிகமாக பெற போகின்றனர். அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மகாலட்சுமி யோகம்
மகாலட்சுமி யோகம்

ட்ரெண்டிங் செய்திகள்

ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடிய சுக்கிர பகவான், சொகுசு, வியாபாரம், காதல், ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சுக்கிரன் இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

சுக்கிர பகவான் சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் கடந்த மார்ச் 7ஆம் தேதி அன்று நுழைந்தார். அதேசமயம் செவ்வாய் பகவான் மார்ச் 15ஆம் தேதி என்று கும்ப ராசியில் நுழைந்தார். தற்போது சுக்கிரன் செவ்வாய் சேர்ந்துள்ளனர். மேலும் சனி பகவான் அவர்களோடு சேர்ந்து பயணம் செய்து வருகிறார்.

செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்த காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் பணவரவை அதிகமாக பெற போகின்றனர். அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் 11 வது வீட்டில் மகாலட்சுமி யோகம் உருவாக்கிய காரணத்தினால் எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். நிதி ஆதாயங்கள் உங்களுக்கு உண்டாகும். சிக்கிக் கிடந்த பணம் உங்களை தேடி வரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் முடிவடையும். மற்றவர்களை ஈர்க்கும் வகையில் உங்களுடைய செயல் இருக்கும்.

விருச்சிக ராசி

 

மகாலட்சுமி யோகம் உங்களுடைய ராசியில் நான்காவது வீட்டில் உருவாகியுள்ளது. இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு பாராட்டுகளை கொடுப்பார்கள். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் மகாலட்சுமி யோகம் உருவாகியுள்ள காரணத்தினால் வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel