தமிழ் செய்திகள்  /  Astrology  /  Here Are The Zodiac Signs That Are Going To Enjoy The Fortune Of Venus To The Fullest

சனியை பிடித்தார் சுக்கிரன்.. கும்பத்தில் ஆரம்பம்.. பணமழை பெறும் ராசிகள்.. யோகம் வந்துவிட்டது

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 18, 2024 12:42 PM IST

Transit of Venus: சனிபகவானும், சுக்கிர பகவானும் நட்பு கிரகங்கள் என்கின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இந்த மார்ச் மாதத்தில் இருந்து அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது உறுதி தெரிந்து கொள்ளலாம்.

சுக்கிரன்
சுக்கிரன்

ட்ரெண்டிங் செய்திகள்

சுக்கிரன் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார் .சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். மகர ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் கடந்த மார்ச் ஏழாம் தேதி அன்று சனிபகவான் ராசியான கும்ப ராசியில் நுழைந்தார்.

சனிபகவானும், சுக்கிர பகவானும் நட்பு கிரகங்கள் என்கின்ற காரணத்தினால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இந்த மார்ச் மாதத்தில் இருந்து அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது உறுதி தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

சுக்கிர பகவானின் இடமாற்றம் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ரிஷப ராசி

 

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். சிக்கலை ஏற்படுத்தியவர்கள் தற்போது உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்க கூடும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணம் உங்களை தேடி வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதிய திட்டங்களை ரகசியமாக வைத்துக் கொண்டால் உங்களுக்கு வெற்றி கண்டிப்பாக கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அனைத்து வகையிலும் சிறப்பான பலன்கள் தேடி வரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. உறவினர்கள் உங்களை தேடி வருவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

WhatsApp channel