Guru Peyarchi Luck: மகர ராசியை பார்க்கும் குரு.. விருச்சிகத்தில் சமசப்தமாக அமரும் குரு.. கடகத்திற்கு என்ன கிடைக்கும்?
குரு பகவானை பொருத்த அளவு அவர் இருக்கின்ற இடத்தை விட,பார்க்கின்ற பார்வைக்குதான் சிறப்பு அதிகம்.
மேஷ ராசி, ரிஷப ராசி, மிதுன ராசி, கடக ராசி ஆகியவை நான்காம் வீடாக இருக்கிறது. இந்த வீட்டில் சந்திர பகவான் ஆட்சி புரிகிறார். இது அவருடைய சொந்த வீடாக வருகிறது. இதனால் கடக ராசி காரர்களுக்கு தாய் உள்ளமானது இயல்பாகவே இருக்கும்.
குரு பகவானை பொருத்த அளவு அவர் இருக்கின்ற இடத்தை விட,பார்க்கின்ற பார்வைக்குதான் சிறப்பு அதிகம்.
அவர் தற்போது பதினொன்றாம் வீட்டிற்கு வர இருக்கிறார். அவர் உங்களது மூன்றாம் வீடான கன்னி ராசி, ஐந்தாம் வீடான விருச்சிக ராசி, ஏழாம் வீடான மகர ராசி ஆகியவற்றை பார்க்க போகிறார்.
இதில் மூன்றாம் வீட்டை என்பது உப ஜெய ஸ்தானம் என்று சொல்வோம். இந்த இடத்தை குரு பகவான் தன்னுடைய சிறப்பு ஐந்தாம் பார்வையாக பார்ப்பதினால் கடக ராசி அன்பர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும்.
நினைத்த படிப்பை பார்க்கும் வாய்ப்பு அமையும். இந்த காலகட்டத்தில் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் நல்ல பலன்களை கொடுக்கும். ஐந்தாமிடமான விருச்சிக ராசியின் மீது குரு பகவான் உடைய பார்வை சம சப்தமாக விழுவதினால், இந்த காலகட்டத்தில் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் நல்ல பலன்களை கொடுக்கும்.
கூடுதலாக சொல்ல வேண்டும் என்றால், உடனடியாக பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் இருக்கின்றன. புத்திர பாக்கியம் உருவாகும்.
உங்களுடைய ராசிக்கு இது பஞ்சமஸ்தானம் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பதினால், நினைத்து பார்க்க முடியாத அளவில் வெற்றிகள் உங்களுக்கு வந்து சேரும்.
ஏழாம் இடமான மகர ராசியை குருபகவான் பார்ப்பதினால் ஆணாக இருக்கக்கூடிய கடக ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் அழகான பெண்மணி மனைவியாக அமைவார். பெண்ணாக இருக்கக் கூடிய கடக ராசிக்காரர்களுக்கு நல்ல கணவனும் அமைவார்கள். ஆகையால் இந்த ஆண்டு அனைத்து செல்வங்களும் உங்களை வந்து சேரும்” என்று பேசினார்.
டாபிக்ஸ்