தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sunday: ஞாயிற்றுக்கிழமை செய்ய வேண்டியவை.. செய்ய கூடாதவை.. பலன்கள் உச்சம்தான்

Sunday: ஞாயிற்றுக்கிழமை செய்ய வேண்டியவை.. செய்ய கூடாதவை.. பலன்கள் உச்சம்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 23, 2023 12:35 PM IST

ஞாயிற்றுக்கிழமைகளில் செய்ய வேண்டியவையும், செய்யக்கூடாதவையும் என்ன என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்

ஞாயிற்றுக்கிழமை
ஞாயிற்றுக்கிழமை

சூரிய நமஸ்காரம் மற்ற கிழமைகளில் செய்ய முடியாவிட்டாலும், ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டாயம் செய்ய வேண்டும் எனக் கூறப்படுகிறது. மனதை ஒருமுகப்படுத்தி இறைவனை நினைத்து வழிபட்டால் அதீத பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

வீட்டில் அமர்ந்து தியானம் செய்யலாம். இல்லையென்றால் கோயில் நீர்நிலைகள் மலைப்பிரதேசங்கள் போன்ற இயற்கை சூழல் நிறைந்த இடங்களில் அமர்ந்து தியானம் செய்யலாம். இப்படி செய்தால் இறைவனின் அருள் உங்களுக்கு இரட்டிப்பாக கிடைக்கும் என கூறப்படுகிறது.

செய்ய வேண்டியவை

தியானம் மற்றும் தானம்

குறிப்பாக பிரதோஷம், பௌர்ணமி, அஷ்டமி போன்ற நாட்களில் தியானம் செய்தால் உங்களது பலன் மூன்று மடங்காக பெருகும் எனக் கூறப்படுகிறது. ஒருவேளை இந்த நாட்கள் ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வந்தால் அந்த ஒரு நாள் தியானம் ஆனது உங்கள் பிறவி பலனை கொடுக்க வல்லது என ஆன்மீகம் கூறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உரிய நாளாகும். காலையில் இருந்து சூரிய பகவானை தரிசனம் செய்துவிட்டு தியானம் செய்தால் உடல் ரீதியாக நல்ல பலன் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் தியானம் செய்வது மட்டுமல்லாமல் தானம் செய்தாலும் அதீத பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யக்கூடாத சில முக்கியமான விஷயங்களை இங்கே காண்போம்.

சிவப்பு உடை

ஞாயிற்றுக்கிழமைகளில் சிவப்பு நிற உடைந்தால் நீங்கள் தொட்ட காரியம் வெற்றி அடையும் என கூறப்படுகிறது. சிவப்பு நிற உடை மங்களகரமானதாக ஞாயிற்றுக்கிழமைகளில் கருதப்படுகிறது. இதன் மூலம் நமக்கு அதிர்ஷ்டமும், வெற்றியும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

செய்யக்கூடாதவை

தேவையற்ற பிரயாணம்

ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யக்கூடாத முக்கிய விஷயங்களில் தேவையற்ற பிரயாணங்களை மேற்கொள்ளக்கூடாது. குறிப்பாக அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தொலைதூர பயணத்தை மேற்கொள்ள வேண்டும். தேவையில்லாத தொலைதூர பயணங்களை மேற்கொண்டால் படாத பாடு படுவீர்கள் என கூறப்படுகிறது.

புதிதாக மருந்து எடுத்துக் கொள்ளக் கூடாது

ஞாயிற்றுக்கிழமைகளில் முதன் முதலாக புதிய மருந்துகளை உடலில் செலுத்தக் கூடாது. உடல் பாதிப்பிற்காக மருத்துவரை அணுகி சாப்பிட மருந்து வாங்கி இருந்தால், அதனை ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்கக்கூடாது. அது தேவையில்லாத விஷயங்களை இழுத்து விடும் என கூறப்படுகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்