October Rasi Palan: இந்த ராசிக்காரருக்கு சுக்கிரன் துணை அக்டோபரில் இருக்கும்.. நினைத்தது நடக்கும்!-sukkiran will be the companion of this zodiac sign in october - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  October Rasi Palan: இந்த ராசிக்காரருக்கு சுக்கிரன் துணை அக்டோபரில் இருக்கும்.. நினைத்தது நடக்கும்!

October Rasi Palan: இந்த ராசிக்காரருக்கு சுக்கிரன் துணை அக்டோபரில் இருக்கும்.. நினைத்தது நடக்கும்!

Manigandan K T HT Tamil
Sep 20, 2024 02:03 PM IST

Horoscope: அது மாதிரியான ஒரு மாதம்தான் இந்த அக்டோபர் 2024. உங்க வேலை செய்யற சூழ்நிலை கூட உங்களுக்கு சாதகமா மாற்றும். ஒரு எனர்ஜியை கொடுத்துரும். அதுதான் சுக்கிரனுடைய பலம். மற்ற எல்லா கிரகங்களை விட சுக்கிரனுக்கு இருக்கக்கூடிய ஒரு பலம் இதுவே.

October Rasi palan 2024: இந்த ராசிக்காரருக்கு சுக்கிரன் துணை அக்டோபரில் இருக்கும்.. நினைத்தது நடக்கும்!
October Rasi palan 2024: இந்த ராசிக்காரருக்கு சுக்கிரன் துணை அக்டோபரில் இருக்கும்.. நினைத்தது நடக்கும்!

அதான் சுக்கிரனுடைய பலம் சுக்கிரன். எப்பவுமே அவர் என்ன நினைக்கிறாரோ அந்த அம்சத்துல பிறக்கிறவங்களுக்கு அவங்களுடைய மனது எப்படி இருக்கோ அவங்களுடைய எமோஷன்ஸ் அப்படி இருக்கும். அவங்களுடைய ஒரு ஒரு ஈடுபாடு எதுல இருக்கோ அது அப்படியே முழு போக்கஸ் கொடுக்கும்.

அது மாதிரியான ஒரு மாதம்தான் இந்த அக்டோபர் 2024. உங்க வேலை செய்யற சூழ்நிலை கூட உங்களுக்கு சாதகமா மாற்றும். ஒரு எனர்ஜியை கொடுத்துரும். அதுதான் சுக்கிரனுடைய பலம். மத்த எல்லா கிரகங்களை விட சுக்கிரனுக்கு இருக்கக்கூடிய ஒரு பலம் இதுவே.

ரிலேஷன்ஷிப் அண்ட் ஃபேமிலி

உங்களுக்கு செவ்வாய்ஒரு முக்கியமான கிரகம். அவர் 9ல இருந்து 10-க்கு நகர்கிறார். ரிலேஷன்ஷிப் அண்ட் ஃபேமிலிக்கு முக்கியத்துவம் கொடுக்கிற ஒரு மாதம் இது. ஃபேமிலிக்கு என்ன தேவை ஃபேமிலி மெம்பர்ஸ்குள்ள எப்படி இருக்கணும், ஒருவேளை திருமணம் முயற்சி எடுக்கிறவங்களுக்கு அதுக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும், ரிலேஷன்ஷிப்ல இருக்கீங்க கல்யாணம் வரைக்கும் கொண்டு போயிடலாமா அதுக்கு ஒரு பாசிட்டிவ் அறிகுறியா இந்த மாதம் இருக்கும்.

பாசிட்டிவான மாதம்

இந்த மாதம் மைண்ட் ரொம்ப பாசிட்டிவ் ஆகும். ஒரு ரிலேஷன்ஷிப்பை வந்து நல்லபடியா ஒரு திருமணம் வரைக்கும் அழகா கொண்டு போறதுக்கு உண்டான ஒரு எனர்ஜி இதெல்லாம் கிடைக்கப்பெறக்கூடிய ஒரு நல்ல மாதமாக இருக்கும்.

மாணவர்களுக்கு நல்ல நம்பிக்கை உருவாகும். அதுவும் ரொம்ப ஃபேவரபிளா பாசிட்டிவா இருக்கும். இதெல்லாம் ரொம்ப அற்புதமான ஒரு நிகழ்வுகளுடைய ஒரு அமைப்பா பார்க்கலாம். உங்களுடைய எனர்ஜி உங்களுடைய ஃபோக்கஸ் அதெல்லாம் நல்லா இருக்கும்.

இல்லத்தரசிகளுக்கு பாசிட்டிவிட்டி அதிகரிக்கும். சனி இடையூரே இல்லாம உங்களுடைய பிரச்சனைகளை ஸ்மார்ட்டா வந்து தீர்த்து வைத்துவிடுவார்.

குரு 8 ல இருந்து அவருடைய பார்வை 2ல இருக்கிறதுனால குடும்பத்துக்கு இன்னும் என்ன நல்லது பண்ணலாம், இன்னும் என்ன நல்லது பண்ணலாம், இன்னும் என்ன செய்யலாம் அப்படின்னு யோசிக்கிற பலத்தை கொடுப்பார். சுக்கிரன் உங்களுக்கு மனசுல நினைக்கிறதெல்லாம் உங்களை தேடி வர அளவுக்கு ஒரு ஆற்றலை கொடுப்பார்.

ஆரோக்கியம்

கடந்த இரண்டு மாதங்களா கேதுவோட சுக்கிரன் இருந்ததுனால கொஞ்சம் உடல் எல்லாம் சரியில்லாமல் போயிருக்கலாம். உடல் உபாதைகள் இருந்ததுன்னா இந்த மாதம் எல்லாம் உற்சாகமா ஃபீல் பண்ணுவீங்க.

நீங்கள் நினைத்ததை நடத்தி முடிக்கக் கூடிய ஒரு மாதமாக இருக்கும். எல்லா விஷயமுமே கொஞ்சம் சாதகமா இருக்கும். துலாம் ஒரு அதிர்ஷ்டகரமான மாதம். இது ஒரு பொது பலன். ஒவ்வொருத்தருக்கும் ஒரு ராசி இருக்கும், ஒரு ஒரு லக்னம் இருக்கும். அதுக்குள்ள நட்சத்திரங்கள் இருக்கும்.உங்களுடைய தசா புக்திகள் இருக்கும். உங்க பிறவி ஜாதகத்துடைய அமைப்பு இருக்கும். இதெல்லாம் அடிப்படையா வெச்சிதான் ஒரு மனிதனுடைய பலன்கள் என்ன நடக்கும்னா சரியாக தெரிஞ்சிக்க முடியும்.

Whats_app_banner

டாபிக்ஸ்