தமிழ் செய்திகள்  /  Astrology  /  Guru Bhagavan Enters Taurus On May 1st So Lets See About Lucky Zodiac Signs

குரு விடாமல் தருவார்.. யோகக்கார ராசிகள்.. அதிர்ஷ்ட மழையில் நனைய போவது யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 18, 2024 01:54 PM IST

Guru Transfer: மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குரு பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் பணவரவை பெறப்போகின்றனர்.

Guru Transfer
Guru Transfer

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களின் ராசி மாற்றம் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டு சனி மற்றும் ராகு கேது கிரகங்களின் இடத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. குருபகவான் இந்த ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குரு பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் பணவரவை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

குருபகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ள காரணத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வருகிறது. பண வரவில் எந்த குறையும் இருக்காது. வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவையை பூர்த்தி செய்தீர்கள் நீண்ட நாள் ஆசைகளும் நிறைவேறும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது.

விருச்சிக ராசி

 

குருபகவான் உங்கள் ராசியில் ஏதாவது வீட்டில் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். கூட்டுத்தொழில் முயற்சிகள் வெற்றியைப் பெற்றுத் தரும் நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் குரு பகவான் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும். நிதி நிலைமையில் எதிர்பாராத அளவிற்கு உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பேச்சு திறமையால் காரியங்கள் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

WhatsApp channel