Panguni: 'பங்குனி மாதம் வீடு கட்டலாமா? திருமணம் செய்யலாமா?' - ஜோதிட சாஸ்திரம் கூறுவது என்ன?
பங்குனி மாதம் வீடு கட்டலாமா, திருமணம் செய்யலாமா என்பது குறித்தப் பல்வேறு தகவல்களுக்கு ஜோதிட சாஸ்திரங்கள் கூறுவதைக் காண்போம்.
பங்குனி மாதம் என்றாலே பலர் வீட்டுப் பணியைத் தொடங்குவதில்லை, சிலர் திருமணம் போன்ற சுபகாரியங்களைச் செய்யாமல் தடுக்கின்றனர்.
பங்குனி மாதம் புதிதாக வீடு கட்ட ஆரம்பிக்கலாமா என்பது குறித்தும், வீடுகட்டிக் கிரகப்பிரவேசம் செய்யலாமா என்பது குறித்தும், திருமணம் செய்யலாமா என்பது குறித்தும் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன.
பங்குனி மாதம் வாஸ்து பகவான் நித்திரையில் இருந்து எழுவது இல்லை. வாஸ்து பகவான் பூமிக்கடியில் தூங்கிக்கொண்டிருக்கும்போது தொந்தரவு செய்யக்கூடாது. ஆகையால் பங்குனி மாதத்தில் வீடு கட்டும் பணியைத் தொடங்கக் கூடாது. வீடு கட்டி முடித்தவர்கள் கிரகப்பிரவேசம் செய்யக்கூடாது. வீடு சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் செய்யக்கூடாது என வாஸ்து நூல்கள் கூறுகின்றன.
இந்த மாதம் திருமணம் செய்யலாமா எனக் கேட்டால், திருமணம் செய்யலாம். தெய்வத்திருமணங்கள் பங்குனி மாதத்தில் நிகழ்ந்துள்ளன. பங்குனி மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய திருமணத்திற்காக வரும் தேதிகளைப் பார்ப்போம்.
2024ஆம் ஆண்டு பங்குனி மாதம், ஏழாம் தேதி(மார்ச், 20) புதன்கிழமை, பங்குனி மாதம் 14ஆம் தேதி(மார்ச் 27) புதன்கிழமை, ஆகிய நாட்கள் பங்குனி மாதத்தில் திருமணம் செய்ய சிறந்த நாட்களாகும்.
இக்காலகட்டத்தில் கோயில்களில் பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம் அன்று, சுவாமிக்கு திருமணம் நடக்கும். சில பகுதிகளில் சுவாமி திருமணத்துக்குப் பிறகு திருமணம் செய்வார்கள். உங்கள் பகுதி வழக்கப்படியும், உங்கள் குடும்ப வழக்கப்படியும், நீங்கள் திருமணம் செய்துகொள்ளலாம்.
இந்த பங்குனி மாத வளர்பிறை முகூர்த்த நாட்களில் நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் ஆகியவற்றைச் செய்யலாம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்