Guru lucky Rasis: குரு பகவான் வந்துவிட்டார்.. யோகத்தை கொட்ட போகிறார்.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் யோக ராசிகள்-here we will find the zodiac signs from which guru bhagavan gets lucky - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Lucky Rasis: குரு பகவான் வந்துவிட்டார்.. யோகத்தை கொட்ட போகிறார்.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் யோக ராசிகள்

Guru lucky Rasis: குரு பகவான் வந்துவிட்டார்.. யோகத்தை கொட்ட போகிறார்.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் யோக ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 14, 2024 09:34 AM IST

Guru Transit: குரு பகவான் பிப்ரவரி 3ஆம் தேதி அன்று பரணி நட்சத்திரத்தில் நுழைந்தார். வரும் ஏப்ரல் மாதம் வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்கின்ற காரணத்தினால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

வரும் மே ஒன்றாம் தேதியன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நட்சத்திர இடமாற்றம் செய்வார்.

அந்த வகையில் குரு பகவான் பிப்ரவரி 3ஆம் தேதி அன்று பரணி நட்சத்திரத்தில் நுழைந்தார். வரும் ஏப்ரல் மாதம் வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்கின்ற காரணத்தினால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை தரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷப ராசி

 

குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுத்துள்ளது. நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. அதிக வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குரு பகவானின் அருளால் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். ஒவ்வொரு துறையிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள்.

கன்னி ராசி

 

குரு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பணம் மழையை பொழிய போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். செய்யும் வேலைக்கு ஏற்ப பலன்கள் இரட்டிப்பாக கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9