Guru peyarchi 2024: தொழிலில் நல்ல லாபம், எடுத்த காரியங்களில் நன்மை..! ஆயில்யம் நட்சத்திரனருக்கான பலன்கள்
ஆயில்யம் நட்சத்திரம் நான்கு பாதங்கள் கடக ராசியில் இருந்து வரும் நிலையில், எதிர்வரும் குரு பெயர்ச்சியால் இந்த நட்சத்திரனருக்கு கிடைக்கப்போகும் நற்பலன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் ஐந்தாம் பார்வையாக கன்னி, ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியையும், ஒன்பதாம் பார்வையாக மகரத்தையும் பார்வையிடுகிறார். அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நான்கு மாத காலங்களில் குரு வக்கிர நிவர்த்தி அடைகிறார். கடக ராசியில் ஆயில்யம் நட்சத்திரத்தின் நான்கு பாதங்களும் இருந்து வருகிறது.
குரு பெயர்ச்சியால் ஆயில்யம் நட்சத்தினர் பெறும் பலன்கள்
ஆயில்யம் நட்சத்திரம் குருவின் நட்சத்திரமாக இருந்து வருகிறது. மற்ற நட்சத்திரத்தை போல் இல்லாமல் ஆயில்யம் நட்சத்தினருக்கு ஆஸ்டம சனி மூன்றரை வருட காலங்கள் இருக்கும். இந்த நட்சத்தினருக்கு 20 வயது வரை கேது திசை உள்ளது. படிப்பில் இருந்த தடை, தாமதங்கள் அனைத்து விலகும். முன்னேற்றம் அடைவீர்கள்.
40 வயது வரை இருப்பவர்களுக்கு சுக்கிர திசையாக உள்ளது. சகோதர வகையில் இருந்த பாதிப்புகள் விலகும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த வேலைகள் கைகூடி வரும். வேலைகளில் முயற்சிகளை வெளிப்படுத்தினால் சம்பள உயர்வு கிடைக்கும்.
திருமண வயதில் இருப்பவர்களுக்கு வரன் அமையும். கணவன் மனைக்குள் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுப செலவுகள் இருக்கும். இந்த காலகட்டத்தில் பல்வேறு நன்மைகளையே பெறுவீர்கள். பெரிய அளவிலான முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.
46 வயது வரை உள்ளவர்களுக்கு சூரிய திசையாக உள்ளது. இதுவரை இருந்து வந்த கஷ்ட காலம் நீங்கும். கடன் பிரச்னை தீரும். வளர்ச்சி உண்டு. பெண்களுக்கு இருந்த மனஅழுத்த நீங்கும்
56 வயது வரை இருப்பவர்களுக்கு சந்திர திசை உள்ளது. சொத்து பிரச்னையில் இருந்து வந்த பாதிப்புகள் விலகும். உறவுகளால் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். வீடு கட்டும் யோகம் உண்டு. தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு அழுத்தங்கள், வேலை மாற்றங்கள் ஏற்படலாம். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
63 வயது இருப்பவர்களுக்கு செவ்வாய் திசை உள்ளது. பிள்ளைகளுக்கு நன்மையை தரும். தாய் வீட்டு உறவுகளிடம் இருந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். 81 வயது வரை இருப்பவர்களுக்கு ராகு திசையாக உள்ளது. மன உளைச்சல் ஏற்பட்டாலும், வளர்ச்சியை பெறுவீர்கள். பிள்ளைகள் நன்மை பெறுவீர்கள்.
பொதுப்பலன்கள்
விருப்பங்கள், எண்ணங்கள் நிறைவேறும் காலமாக குரு பெயர்ச்சி இருக்கும். கையில் பணப்புழக்கம் இருக்கும். திட்டமிட்டு செய்யும் காரியங்கள் அனைத்திலும் முன்னேற்றத்தை பெறுவீர்கள். எதிர்பாராத பயணத்தால் நன்மை கிடைக்கும். உற்பத்தி துறையில் இருப்பவர்கள் எதிர்பார்த்த வருமானங்கள் கிடைக்கும். சுப காரியங்கள் நடக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். வழக்குகளும் சாதமாக அமையும். நரம்பு ரீதியிலான பிரச்னைகள், மூலம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படலாம். உடல்நிலையில் கவனம் தேவை. மற்றவர்கள் நம்பி ஏமாற வேண்டாம். பைரவர் வழிபாடு நன்மையை ஏற்படுத்தும்.
பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்