Oleander flower: வீட்டில் அமைதி நிலவ அரளி செடியை வீட்டில் வளர்க்கலாமா? வாஸ்து சாஸ்திரம் என்ன சொல்கிறது பாருங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Oleander Flower: வீட்டில் அமைதி நிலவ அரளி செடியை வீட்டில் வளர்க்கலாமா? வாஸ்து சாஸ்திரம் என்ன சொல்கிறது பாருங்க!

Oleander flower: வீட்டில் அமைதி நிலவ அரளி செடியை வீட்டில் வளர்க்கலாமா? வாஸ்து சாஸ்திரம் என்ன சொல்கிறது பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 31, 2024 12:22 PM IST

வாஸ்து சாஸ்திரத்தில் அரளி பூக்களுக்கும் அதிக முக்கியத்துவம் உண்டு. அரளிப் மலர் வீட்டில் இருந்தால் மகிழ்ச்சியும், பல நன்மைகளும் உண்டாகும் என்பது நம்பிக்கை. இதனால் அரளி செடி விஷமாக கருதப்பட்டாலும், வாஸ்து படி அதன் பூக்களால் மிகவும் புனிதமானது.

அரளிப்பூ செடி
அரளிப்பூ செடி (pixa bay)

வாஸ்து சாஸ்திரத்தில் அரளி பூக்களுக்கும் அதிக முக்கியத்துவம் உண்டு. அரளிப் மலர் வீட்டில் இருந்தால் மகிழ்ச்சியும், பல நன்மைகளும் உண்டாகும் என்பது நம்பிக்கை. இதனால் அரளி செடி விஷமாக கருதப்பட்டாலும், வாஸ்து படி அதன் பூக்களால் மிகவும் புனிதமானது. இது பல நேரங்களில் தெய்வ வழிபாட்டுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

அரளிப் பூக்கள் வெள்ளை, இளஞ்சிவப்பு, மஞ்சள் மற்றும் வெளிர் இளஞ்சிவப்பு நிறங்களில் கிடைக்கும். பிங்க் வண்ண பூக்கள் பெரும்பாலும் சாலையோரங்களில் காணப்படுகின்றன. கணவன்-மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் அதிகமாக இருந்தால், இருவருக்குள்ளும் எரிச்சல் அதிகமாக இருந்தால் வீட்டில் அரளி பூ மரத்தை நடலாம். இவ்வாறு செய்வதால்த கணவன் மனைவிக்கு இயையே அடிக்கடி ஏற்படும் மோதல்கள் குறைய வாய்ப்புள்ளதாக வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் கூறுகின்றனர்.

தெய்வங்களுக்குப் பிடித்த மலர்

பொதுவாகவே பூக்கள் இல்லாமல் எந்த பூஜையும் நிறைவடையாது. தெய்வங்களுக்கு விருப்பமான மலர்களைப் பயன்படுத்தி பூஜை செய்யப்படுகிறது. வேதங்களின்படி, அரளி மலர்கள் லட்சுமி தேவிக்கு மிகவும் பிடிக்கும். எனவேதான் லட்சுமி தேவியை அரளி மலர்களால் வழிபடுவதால் வாழ்வில் செல்வம், மகிழ்ச்சி, செழிப்பு உண்டாகும். உங்கள் வீட்டில் லட்சுமி தேவியின் அருள் வேண்டுமானால் வீட்டில் அரளி பூ மரத்தை வைத்திருங்கள்.

லட்சுமி தேவியை வெள்ளை அரளி மலர்களால் வழிபட்டால் அம்மனின் அருள் கிடைக்கும். மேலும் மஞ்சள் அரளி என்றால் விஷ்ணுவுக்கு மிகுந்த உகந்தது. இந்த மலர்களால் ஸ்ரீ ஹரியை வழிபடுவதால் சகல செல்வங்களும் பெருகும். அதுமட்டுமின்றி, வாஸ்து சாஸ்திரத்தின்படி இந்த செடியை வீட்டில் வளர்ப்பது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கிறது. வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் எப்போதும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.

அரளி செடி எந்த திசையில் நட வேண்டும்?

அரளி பூ செடியை வாஸ்து படி நடவு செய்தால் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் தெரியுமா. மஞ்சள் அரளி மலர் செடியை வீட்டின் பிரதான நுழைவாயிலின் முன் கிழக்கு திசையில் வைப்பது நல்லது. மேலும் வெள்ளை நிற அரளி மலர் செடியை கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் நட வேண்டும். இவ்வாறு செய்தால் வீட்டில் ஏற்படும் பிரச்சனைகள் விரைவில் நீங்கி அமைதி பெருகும்.

ஜோதிட சாஸ்திரத்தில் மாங்கல்ய தோஷத்தை போக்க அரளி பூக்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அதனால்தான் இந்த மலர்கள் மிகவும் புனிதமானவை என்று கூறப்படுகிறது. அரளி செடி நச்சுத்தன்மை வாய்ந்தது என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் மருத்துவ குணமும் கொண்டது. அரளி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து வலி உள்ள இடத்தில் தடவினால் தோல் பிரச்சனைகள் மற்றும் மூட்டு வலி குறையும். சிறு குழந்தைகள் இந்த மரத்தின் விதைகளை உண்ணாமல் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் இது விஷத்தன்மை கொண்டது.

Whats_app_banner