தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Thirumangalyam: தாலியில் ஊக்கு மாட்டி வைப்பரா நீங்கள்.. எத்தனை சிக்கல் வரும் பாருங்க?

Thirumangalyam: தாலியில் ஊக்கு மாட்டி வைப்பரா நீங்கள்.. எத்தனை சிக்கல் வரும் பாருங்க?

Pandeeswari Gurusamy HT Tamil
Oct 10, 2023 12:00 PM IST

Thali: கணவனின் வருமானத்தை தாலி தடை செய்யுமா என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

திருமாங்கல்யம்
திருமாங்கல்யம் (SunithaR (Twitter))

பெரும்பாலான பெண்கள் தங்கள் மாங்கல்யத்தை மிகவும் பயபக்தியுடன் பராமரித்து வருகின்றனர். அந்த திருமாங்கல்யம் எப்படி இருக்க வேண்டும். அதை எப்படி பராமரிப்பது குடும்பத்திற்கு நன்மை தரும் திருமாங்கல்யம் எப்போது கணவனின் வருமானத்தை தடை செய்யும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

ஒரு பெண் அணிந்திருக்கும் திருமாங்கல்ய கயிற்றை எப்போது மஞ்சள் நிறத்தில் மங்களகரமாக வைத்துக்கொள்வது நல்லது. தினமும் குளிக்கும் போது திருமாங்கல்ய கயிற்றில் மஞ்சள் தேய்த்து குளிப்பது எப்போதும் கயிற்றை மஞ்சளாக வைத்திருக்கும்.

அதனால் தான் முந்தைய காலத்தில் வீடுகளின் குளியலறையில் மஞ்சள் கிழங்கு தேய்க்கும் கல்லும் மஞ்சளும் வைத்திருந்தனர். அதுவும் வீட்டிற்கு மங்கலம் தரும் என நம்பப்பட்டது.

தங்கத்தில் தாலி அணிந்திருப்பவர்கள் அதில் மஞ்சள் தேய்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மாங்கல்யத்தில் தினமும் குங்குமம் வைக்க வேண்டும். குறைந்தது வெள்ளி செவ்வாய், விஷேச நாட்களில் மட்டுமாவது திருமாங்கல்யத்தில் கணவன் குங்குமம் வைத்து விட வேண்டும்.

கணவன் வெளியூரில் இருந்தால் வீட்டில் உள்ள பெரியவர்கள் ஆசிர்வதித்து பெண்ணின் மாங்கல்யத்தில் குங்குமம் வைத்து விடலாம். வெள்ளி கிழமை திருமாங்கல்யத்தில் பூ வைப்பது மேலும் விஷேசமான பலன்களை தரும். கணவனின் முன்னேற்றத்தை தடை செய்யும் சக்திகளை விரட்ட இந்த திருமாங்கல்யம் பயன்படும்.

இரும்பினால் ஆன எந்த பொருட்களையும் திருமாங்கல்யத்தில் வைக்க கூடாது. காரணம் சனிபகவான் பார்வை பெற்ற ஒரு உலோகம் ஆகும். இது எதிர்மறை ஆற்றலை தரும்.

சில பெண்கள் தங்கள் தாலியில் ஊக்கு மாட்டி வைத்திருப்பார்கள். இது தங்கதிற்கு கேடு விளைவிப்பதோடு கணவனின் வருமானத்தையும் தடை செய்யும் என்று நம்பப்படுகிறது.

திருமாங்கல்யம் உடையும் தறுவாயில் இருந்தால் மட்டும் தான் அதை மாற்ற வேண்டும். அதை கடவுளுக்கு காணிக்கையாக செலுத்துவதும் நல்லதல்ல என்றே நம்பப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்