தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Online Prasadam: பிரசித்தி பெற்ற கோயில்களில் ஆன்லைன் மூலம் பிரசாதம் பெறுவது எப்படி?

Online Prasadam: பிரசித்தி பெற்ற கோயில்களில் ஆன்லைன் மூலம் பிரசாதம் பெறுவது எப்படி?

Karthikeyan S HT Tamil
Aug 01, 2023 12:15 PM IST

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து பிரசாதம் பெறுவது பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம்.

மதுரை மீனாட்சியம்மன்
மதுரை மீனாட்சியம்மன்

முதலில் பிரசாதத்தை பெற விரும்புவோர், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் 'திருக்கோயில்' மொபைல் செயலி மூலமாகவோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ ஆன்லைன் முறையில் முன்பதிவு செய்ய வேண்டும்.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tn.gov.in எனும் இணையதளத்திற்கு செல்லவும். இந்தப் பக்கத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ், இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களின் பட்டியல் இருக்கும். இந்த இணையப் பக்கத்தின் வலது பக்கத்தில் அஞ்சல் வழி பிரசாதம் எனும் ஒரு OPTION இருக்கும். அதை க்ளிக் செய்கையில், 49 கோயில்களின் பிரசாதங்களை அஞ்சல் வழி மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

சென்னை பார்த்தசாரதி கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருச்செந்தூர் சுப்ரணிய சுவாமி கோயில், பழனி தண்டாயுத சுவாமி கோயில் உட்பட பல திருக்கோயில்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் விரும்பும் கோயிலை தேர்வு செய்து, முன்பதிவை க்ளிக் செய்யவும். 

பின்பு அஞ்சல் வழி பிரசாதம் 15 கிராம் என கொடுக்கப்பட்டுள்ளது. விபூதி 5 கிராம், குங்குமம் 5 கிராம், சுவாமி அம்பாளின் புகைப்படம் 5 கிராம் என மூன்றும் சேர்த்து 15 கிராம் என்ற கணக்கில் இந்த பிரசாதம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு விதமான பிரசாதம் இடம்பெற்றிருக்கும். வாங்குபவர்களின் பெயர், ஊர், அடையாள அட்டை உட்பட முக்கிய தகவல்களை பதிவிட்டு, இதற்கான கட்டணம் ரூ.30 என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் இரண்டு பிரசாதம் வரை வாங்கிக் கொள்ளலாம்.

Packing கட்டணம், விநியோக கட்டணம் என மூன்றையும் சேர்த்து பணம் செலுத்துவது போல் இருக்கும். UPI, DEBIT அல்லது CREDIT CARD மூலமாக பணம் செலுத்தி ஆர்டர் செய்துகொள்ளலாம், Cash On Delivery வசதி கிடையாது. 

ஒவ்வொரு கோயில்களுக்கும் பிரசாதங்களின் எடை மற்றும் பிரசாதத்தில் இருக்கும் பொருட்களை பொருத்து பண மதிப்பு மாறும். அதன் பின்பு CAPTCHA-வை சரிசெய்து, விதிமுறைகளுக்கு உட்பட்டது என்பதை டிக் செய்து சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பித்த பின் ஆர்டரை உறுதிசெய்த பிறகு பதிவு செய்தவரின் பெயர் செல்போன் எண், இ-மெயில், தொகை ஆகியவற்றை சரிசெய்து, Make Payment-ஐ Click செய்யவும். Payment-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்த பிறகு, ஒரு Confirmation Page வரும், அதை சேமித்து வைத்து கொள்ளவும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்