தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  10ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்? – விவரங்கள் உள்ளே

10ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்? – விவரங்கள் உள்ளே

Priyadarshini R HT Tamil
May 19, 2023 12:43 PM IST

10ம் வகுப்பு தேர்வு தேர்ச்சியடையாத மாணவர்கள் மே 23ம் தேதி முதல் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 9,14,320, மாணவிகளின் எண்ணிக்கை 4,55,017, மாணவர்களின் எண்ணிக்கை 4,59,303 ஆகும்.

8,35,614 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதில் மாணவர்கள் 4,04,904, மாணவிகள் 4,30,710 பேர் ஆவர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.66 சதவீதம் மாணவிகளும், 88.16 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.

தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்தாண்டும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவர்கள் 88.16%, மாணவிகள் 94.66% தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில், பெரம்பலூர் - 97.67%, சிவகங்கை - 97.53%, விருதுநகர் - 96.22%, கன்னியாகுமரி - 95.99%, தூத்துக்குடி - 95.58% ஆகிய மாவட்டங்கள் முதல் 5 இடங்களை பிடித்துள்ளனர்.

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளிகளில் 87.45% தேர்ச்சி பெற்றுள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்களின் கைபேசி எண்களுக்கு குறுந்செய்திகள் மூலமும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 10ம் வகுப்பு தேர்வு தேர்ச்சியடையாத மாணவர்கள் மே 23ம் தேதி முதல் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு மே 23ம் தேதி முதல் மே 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு துணைத்தேர்வு ஜூன் மாதத்தில் நடத்தப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதி முதல் ஜூலை 4ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

இந்தாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதிய மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 10,808, தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 9,703 (89.77 சதவீதம்)

தேர்வெழுதிய சிறைவாசிகளின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 264. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 112 (42.42 சதவீதம்)

IPL_Entry_Point

டாபிக்ஸ்