Weather Update: இன்று குளு குளு கோடைமழை எங்கு தெரியுமா.. நல்ல செய்தி சொன்ன வானிலை ஆய்வு மையம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Update: இன்று குளு குளு கோடைமழை எங்கு தெரியுமா.. நல்ல செய்தி சொன்ன வானிலை ஆய்வு மையம்!

Weather Update: இன்று குளு குளு கோடைமழை எங்கு தெரியுமா.. நல்ல செய்தி சொன்ன வானிலை ஆய்வு மையம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 02, 2024 09:24 AM IST

Weather Update: தமிழகத்தில் கோடை மழை நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே பல இடங்களில் வெயில் சதமடிக்க தொடங்கியது. இந்நிலையில் நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இந்நிலையில் ஒரு சில பகுதியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை [கோப்புப்படம்]
மழை [கோப்புப்படம்] (HT)

கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பதிவாகும் வெப்பத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கோடை மழை நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே பல இடங்களில் வெயில் சதமடிக்க தொடங்கியது. இந்நிலையில் நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இந்நிலையில் ஒரு சில பகுதியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்றைய வானிலை நிலவரம்

தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

01.04.2024, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

02.04.2024 தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

03.04.2024 முதல் 07.04.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:-

01.04.2024 முதல் 05.04.2024 வரை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:-

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 15-36 டிகிரி செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இந்நிலையில் மீனவர்களுக்கு தனியாக எச்சரிக்கை எதுவும் விடுக்கப்பட வில்லை

கோடை வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள்:-

தண்ணீர்

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.

வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லவும்.

தண்ணீர், எலுமிச்சை சாறு, தேன், இஞ்சி போன்றவை சேர்த்து பானங்கள் தயாரிக்கவும்.

உணவு

லேசான மற்றும் ஜீரணிக்க எளிதான உணவுகளை சாப்பிடவும்.

தர்பூசணி, வெள்ளரி, முலாம்பழம் உள்ளிட்ட நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், சாலட் போன்றவை அதிகம் சாப்பிடவும்.

வறுத்த உணவுகள், அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு உள்ள உணவுகளைத் தவிர்க்கவும்.

ஆடை

வெளிர் நிற, இலகுவான பருத்தி ஆடைகளை அணியவும்.

தொப்பி, கண்ணாடி போன்றவை அணிந்து சூரிய ஒளியில் இருந்து தற்காத்துக் கொள்ளவும்.

வெயில் நேரத்தில் வெளியே செல்லும் நேரத்தை குறைக்கவும்.

சூரிய ஒளி அதிகம் இருக்கும் நேரத்தில் வெளியே செல்ல வேண்டியிருந்தால், நிழலில் நடக்கவும்.

தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிக்கவும்.

வயதானவர்கள் மற்றும் குழந்தைகளை சிறப்பு கவனத்தில் கொள்ளவும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.