Today Weather Update : மக்களே.. அடுத்த ஏழு தினங்களுக்கான மழைக்கு வாய்ப்பு இருக்காம்.. மீனவர்களுக்கான எச்சரிக்கை இதோ!
Today Weather Update : தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

மக்களே.. அடுத்த ஏழு தினங்களுக்கான மழைக்கு வாய்ப்பு இருக்காம்.. மீனவர்களுக்கான எச்சரிக்கை இதோ!
கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை (சமவெளிப்பகுதிகள்):
அதிகபட்ச வெப்பநிலை: நாகப்பட்டினம்: 39.0 ° செல்சியஸ்
குறைந்தபட்ச வெப்பநிலை : ஈரோடு : 19.6 ° செல்சியஸ்