தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vk Sasikala: ’அதிமுகவில் சாதி நுழைந்துவிட்டது! இனிதான் என்னுடைய என்ட்ரியே!’ வி.கே.சசிகலா ஆவேச பேட்டி!

VK Sasikala: ’அதிமுகவில் சாதி நுழைந்துவிட்டது! இனிதான் என்னுடைய என்ட்ரியே!’ வி.கே.சசிகலா ஆவேச பேட்டி!

Kathiravan V HT Tamil
Jun 16, 2024 04:22 PM IST

VK Sasikala: விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தற்போது புறக்கணிப்பது சரி இல்லைதான். தமிழ்நாட்டை பொறுத்தவரை பிரதான எதிர்க்கட்சி அதிமுகதான் என வி.கே.சசிகலா பேட்டி

VK Sasikala: ’அதிமுகவில் சாதி நுழைந்துவிட்டது! இனிதான் என்னுடைய என்ட்ரியே!’ வி.கே.சசிகலா ஆவேச பேட்டி!
VK Sasikala: ’அதிமுகவில் சாதி நுழைந்துவிட்டது! இனிதான் என்னுடைய என்ட்ரியே!’ வி.கே.சசிகலா ஆவேச பேட்டி!

அரசியலில் இனிதான் தனது எண்ட்ரி தொடங்குவதாக வி.கே.சசிகலா கூறி உள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், புரட்சித் தலைவர் ஏழை மக்களுக்காக இந்த இயக்கத்தை தொடங்கினார். அவர் திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை ஏழை மக்களுக்குக்காக தொடங்கினார். அவரது மறைவுக்கு பின் அம்மாவும், நானும், பல துன்பங்களை அனுபவித்து இந்த இயக்கத்தை ஒன்றிணைத்து இந்தியாவிலேயே 3வது பெரிய இயக்கமாக உருவாக்கினோம். ஆனால் இந்த இயக்கம் தொடர்ந்து சரிவுகளை சந்தித்து வருகின்றது. 

அரசியல் குறித்து எம்ஜிஆர் என்னிடம் பேசினார்

ஒருசில சுயநலவாதிகள் இந்த இயக்கத்தை இந்த அளவுக்கு எடுத்து சென்றதே இதற்கு காரணம். இதை நானும், பொறுமையாக பார்த்துக் கொண்டு இருந்தேன். புரட்சித் தலைவரை பொறுத்தவரை அமைதியாகவும், மரியாதை கொடுத்தும் அதிமுகவை உருவாக்கினார். எம்ஜிஆர் அமெரிக்கா சென்று வந்த பிறகு, என்னை சந்திக்கும் போது அவரிடம் நல்ல முறையில் பேசி உள்ளேன். அவரும் இந்த இயக்கத்தின் மேல் நானும் பற்று உடையவள் என்று தெரிந்து பல அரசியல், இயக்கம் தொடர்பான செய்திகளை பேசி உள்ளார். யாரையும் தூக்கிப்போட கூடாது, எல்லோரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதில் அவர் முன்னுரிமை கொடுத்தார். 

ஆர்.எம்.வீரப்பன், எஸ்.டி.சோமசுந்தரம் ஆகியோர் அம்மா அவர்களுக்கு பல தொந்தரவுகளை கொடுத்தார்கள். அப்போது அவர்களுக்கு ஆதரவாக நான் இருந்தேன். எல்லோரையை விட்டுக்கொடுத்து ஒன்றாக இணைந்து செல்ல வேண்டும் என்று என்னிடம் கூறி உள்ளார். 

ட்ரெண்டிங் செய்திகள்

அம்மா ஜாதி பார்ப்பவர் கிடையாது

எனக்கு இந்த ஊருதான் சொந்தம், இந்த ஜாதிதான் சொந்தம் என்பதெல்லாம் எனக்கு தெரியாது. உயர்ந்த சாதியை சேர்ந்த அம்மா அவர்கள் என்னிடம் பழகியே இருக்க முடியாது. அம்மாவும் ஜாதி பார்க்கிறவர்கள் கிடையாது. 

அதிமுகவில் சாதாரண ஏழை கூட பதவிக்கு வரலாம், ஆனால் திமுகவில் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. திமுக குடும்பத்தில் உள்ள வாரிசுகளை பதவிக்கு கொண்டு வருவார்கள். 

நமது இயக்கத்தில் ஒரு குறிப்பிட்ட சாதி என நினைத்து சாதி அரசியலுக்குள் செல்கின்றனர். நிறைய சாதி அமைப்புகள் தனியாக இயக்கம் நடத்துகின்றனர். அப்படி ஆசைப்பட்டால் அவர்கள் தனியாக சென்று செய்யலாம். ஆனால் அம்மாவின் இயக்கத்தில் இப்படி செய்வதை யாரும் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். 

நான் சாதி பார்த்து இருந்தால் ஈபிஎஸ் முதல்வர் ஆகி இருக்கமாட்டார்

நான் சாதி பார்த்து இருந்தால், நான் ஏன் பெங்களூருவுக்கு செல்லும் போது இவருக்கு முதலமைச்சர் பதவி கொடுத்து இருக்க போகிறேன்.  நமக்கு மேற்கு மாவட்ட மக்கள் ஆதரவு தெரிவித்த மக்கள், எல்லோருக்கும் ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்றுதான் நான் செய்தேன். 

இன்றைய நிலைமையில், அதிமுக மூன்றாவது இடத்திற்கும், நான்காவது இடத்திற்கும் சென்றுவிட்டது. தானும் கேட்டு, கட்சியையும் கெடுக்க கூடாது என்பதுதான் எனது கோரிக்கையாக உள்ளது. நல்ல நேரம் தற்போது வந்துவிட்டது. தமிழ்நாட்டு மக்கள் நம் பக்கம் இருப்பார்கள். 

இனிதான் என்னுடைய அரசியல் எண்ட்ரியே

அதிமுக முடிந்து விட்டது என்று நினைக்க முடியாது, ஏனென்றால் என்னுடைய என்ட்ரி ஆரம்பித்துவிட்டது. 2026ஆம் ஆண்டில் நிச்சயமாக அம்மாவின் ஆட்சி தமிழ்நாட்டில் அமைப்போம். விரைவில் பட்டித்தொட்டியெல்லாம் சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். திமுகவின் சலசலப்பு எப்படி ஆகப்போகிறது என்று பாருங்கள். திமுகவின் கோரப்பிடியில் இருந்து தமிழ்நாட்டு மக்களை காக்க வேண்டும் என்றால் நாம் வந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்து இருக்கக்கூடாது

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தற்போது புறக்கணிப்பது சரி இல்லைதான். தமிழ்நாட்டை பொறுத்தவரை பிரதான எதிர்க்கட்சி அதிமுகதான் என சசிகலா கூறி உள்ளார். 

கொடநாடு கொலை வழக்கில் ஆமை வேகத்தில் செல்கிறது. தேர்தலுக்கு தேர்தல் கொடநாடு பற்றிய பேச்சு வருகிறது. ஆனால் முதலமைச்சர் ஏன் அதை நடத்த மறுக்கிறார்.