தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vikravandi : விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. தபால் வாக்கு வசதி செய்து தர வேண்டும் - இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

Vikravandi : விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. தபால் வாக்கு வசதி செய்து தர வேண்டும் - இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

Divya Sekar HT Tamil
Jun 19, 2024 11:07 AM IST

Postal voting : விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் வாக்கு வசதி செய்து தர வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. தபால் வாக்கு வசதி செய்து தர வேண்டும் - இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. தபால் வாக்கு வசதி செய்து தர வேண்டும் - இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

Vikravandi By Election : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து காலியானதாக அறிவிக்கப்பட்ட விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

வேட்புமனுத் தாக்கல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 14ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கு ஜூன் 21 ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும், வேட்புமனுக்கள் மீது 24 ஆம் தேதி பரிசீலனை நடைபெறும் என்றும் வேட்புமனுக்களை திரும்ப பெற 26 ஆம் தேதி கடைசி நாளாகும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.