மாநாடு தொடங்கும் முன்பே ஆட்டத்தை ஆரம்பித்த தவெக தொண்டர்கள்.. அதிகாலையிலேயே அமர்க்களமான விக்கிரவாண்டி
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மாநாடு தொடங்கும் முன்பே ஆட்டத்தை ஆரம்பித்த தவெக தொண்டர்கள்.. அதிகாலையிலேயே அமர்க்களமான விக்கிரவாண்டி

மாநாடு தொடங்கும் முன்பே ஆட்டத்தை ஆரம்பித்த தவெக தொண்டர்கள்.. அதிகாலையிலேயே அமர்க்களமான விக்கிரவாண்டி

Malavica Natarajan HT Tamil
Oct 27, 2024 10:07 AM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று மாலை தொடங்கவுள்ள நிலையில், அதிகாலை முதலே விஜய் ரசிகர்களும் தொண்டர்களும் மாநாடு நடக்கும் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து களேபரம் செய்து வருகின்றனர்.

மாநாடு தொடங்கும் முன்பே ஆட்டத்தை ஆரம்பித்த தவெக தொண்டர்கள்.. அதிகாலையிலேயே அமர்க்களமான விக்கிரவாண்டி
மாநாடு தொடங்கும் முன்பே ஆட்டத்தை ஆரம்பித்த தவெக தொண்டர்கள்.. அதிகாலையிலேயே அமர்க்களமான விக்கிரவாண்டி

முழு நேர அரசியல்

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தான் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்தார். இதற்கிடையே பல கட்ட ஆலோசனைகளுக்குப் பின் வரும் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை மைய இலக்காக வைத்து செயல்படுவதாக அறிவித்த அவர், ஒவ்வொரு வார்டிலும் தமது கட்சி குறித்து மக்களிடம் எடுத்துரைக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வந்தார்.

தவெக முதல் மாநாடு

இதற்கிடையில், இன்று விக்கிரவாண்டி வி.சாலையில் தமது கட்சியின் முதல் மாநாட்டையும் நடத்துவதாக அறிவித்திருந்தார். இந்த மாநாட்டை நடத்துவதற்குள் பல சவால்களையும் இடர்களையும் கடந்து வந்தார் விஜய்.

பின், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மாநாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து மாநாட்டின் பணிகள் மும்மரமாக நடந்து வந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு விஜய் அவரின் ரசிகர்கள் தொண்டர்கள் முன்னிலையில் உரையாற்ற உள்ளார்.

தயார் நிலையில் மாநாடு

இதற்காக 85 ஏக்கர் பரப்பளவில் மாநாடு நடக்கும் இடத்தில் ஏற்பாடுகள் நிறைவு பெற்றுள்ளது. மாநாட்டுக்காக 60 அடி அகலம், 170 அடி நீளத்துக்கு மேற்கூரையுடன் மேடை அமைக்கப்பட்டதுடன், மேடையில் இருந்து 800 மீட்டர் தொலைவுக்கு விஜய் நடந்து சென்று ரசிகர்களை சந்திக்கும் வகையில் ரேம்ப் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் தொண்டர்கள் பங்கேற்க தனித்தனியாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் அமர 40 கேபின்கள் அமைத்து அதில் 55 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது.

தொண்டர்களுக்கு அறிவுறுத்திய விஜய்

இந்நிலையில், மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விஜய் முன்னதாகவே கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், அந்தந்த மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட கேபின்களில் தொண்டர்கள் நண்பகல் 12 மணி முதல் 2 மணிக்குள் வந்து அமர வேண்டும். அதற்கு முன்னதாக எக்காரணம் கொண்டும் தொண்டர்கள் மாநாடு நடக்கும் இடத்திற்கு வரக் கூடாது. போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என பலவற்றை குறிப்பிட்டிருந்தார்.

அக்கறை காட்டாத தொண்டர்கள்

ஆனால், அதற்கு நேர்மாறாக மாநாடு நடக்கும் இடத்திற்கு நேற்று முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கினர். அதுமட்டுமல்லாமல், மாநாடு தொடங்கும் முன்பே அத்துமீறி நுழைந்து இருக்கைகளை எடுத்து கத்தி களேபரம் செய்து வருகின்றனர். இதனால், மாநாடு திட்டமிட்டபடி அமைதியாக நடக்குமா? என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது.

6 மணிக்கு பேசவுள்ள தவெக தலைவர்

மேலும், விஜய் மாலை 6 மணிக்கு திட்டமிட்டபடி உரையாற்ற இருக்கிறார் எனவும், கொடி ஏற்றுவது, உரை நிகழ்த்துவது என மாநாட்டின் அனைத்து பணிகளையும் இரவு 9 மணிக்குள் முடிக்கவும் திட்டமிட்டுள்ளார். ஆனால், அவரின் அனைத்து முயற்சிகளும் திட்டமிட்டபடி நடப்பது சந்தேகமே என்கின்றனர் மாநாடு கள நிலவரத்தை அறிந்தவர்கள்.

இதனால், முதல் முதலில் அரசியல் தலைவராகக் காணவும், அவரது வருங்காலத் திட்டங்கள் குறித்து என்ன சொல்லப் போகிறார் என்பதைக் காண மக்கள் நேற்று முதலே மாநாட்டிற்கு படையெடுக்க ஆரம்பித்த மக்கள் எண்ண செய்ய உள்ளனர் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.