Coimbatore: அக்காவும் தம்பியும் சேர்ந்து கட்சியை வளர்க்கின்றோம் - வானதி சீனிவாசன்
அண்ணாமலை தம்பியும், நானும் சேர்ந்து கட்சியை வளர்க்கின்றோம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரங்கநாத புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துளிர் என்ற திட்டத்தைத் தொடங்கி வைப்பதற்காகக் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வந்திருந்தார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசினார்.
அப்போது அவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேடைகளை தனக்கு ஏற்றார் போல் பயன்படுத்திக் கொண்டு எதிர்க்கட்சிகளை மோசமாகப் பேசி வருகிறார். பிரதமர் மோடியின் மீது விமர்சனம் வைப்பது மட்டுமல்லாமல் எனது ஆட்சிக்கு ஆபத்து வந்தாலும் பரவாயில்லை எனக் கூறுகிறார். எதற்காக அவருக்கு இவ்வளவு பயம் என்று எனக்குத் தெரியவில்லை.
அவரது ஆட்சியைக் கலைப்பதற்கான காரணங்கள் கூறுவதற்கு ஏதேனும் இடம் இருக்கின்றதா? அந்த வேலை தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் நினைக்கிறாரோ?. ஜனநாயகத்திற்கு விரோதமாக எந்த ஆட்சியையும் பாஜக கலைக்க விரும்புவதில்லை. எதற்காக முதலமைச்சருக்கு இந்த பயம் வருகிறது எனத் தெரியவில்லை.
எதிர்க்கட்சிகள் ஒன்று கூடுவதால் பிரதமர் மோடிக்கு எரிச்சல் ஏற்படுகிறது என முதலமைச்சர் கூறுகிறார். உங்கள் எதிர்க்கட்சிக் கூட்டணிக்குள் இயக்கப்பட்ட சிக்கல்கள் இருக்கின்றது. நீங்களே உங்களைப் பெரியவராக நினைத்துக் கொண்டு, பிரதமர் மோடி உங்களைப் பார்த்துப் பயப்படுகிறார் என்று கூறுவது கற்பனையான ஒன்று.
தயவு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் கற்பனை உலகத்தில் இருந்து வெளியே வர வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சிக்கல்களைப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை மூடி மறைப்பதற்காகவே பிரதமர் மோடி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி வருகிறார்.
தமிழ்நாடு ஆளுநர் குறித்து குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியிருக்கும் கடிதம் மிகவும் கற்பனையான ஒன்று. நமது நாட்டின் கலாச்சார பதிவுகள் மற்றும் பண்பாடு தளங்களைப் பற்றி மாணவர்களிடம் பொது வெளியில் ஆளுநர் பேசுகிறார். இது எப்படிச் சிக்கலை ஏற்படுத்தும். ஆளுநர் பற்றி முதலமைச்சரின் எழுதிய கடிதம் முற்றிலும் உண்மை இல்லாதது.
முன்னாள் அமைச்சர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து செய்திகள் வெளியாகி வருகிறது. இது ஒவ்வொன்றிற்கும் ஆளுநர் அலுவலகம் பதில் கொடுப்பதால் உங்களுக்கு எரிச்சல் ஏற்படுகிறது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் எனக்கும் எந்த சிக்கலும் கிடையாது. அக்காவும் தம்பியும் சேர்ந்து கட்சியை வளர்க்கின்றோம். தேசியக் கட்சியில் நாங்கள் பயணிப்பதால் அவர் கோயம்புத்தூர் வரும்பொழுது நான் இல்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. அடுத்த முறை நாங்கள் இருவரும் இருப்பது போல ஒரு கூட்டத்தைத் திட்டமிடுகிறோம் எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்