Udhayanidhi Stalin: அமைச்சரான பிறகு முதல்முறை.. நாளை டெல்லி பறக்கும் உதயநிதி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Udhayanidhi Stalin: அமைச்சரான பிறகு முதல்முறை.. நாளை டெல்லி பறக்கும் உதயநிதி!

Udhayanidhi Stalin: அமைச்சரான பிறகு முதல்முறை.. நாளை டெல்லி பறக்கும் உதயநிதி!

Manigandan K T HT Tamil
Feb 26, 2023 09:14 PM IST

New Delhi: JNU மாணவர்கள் உடன் அவர் சந்திக்கவுள்ளார். மத்திய விளையாட்டு துறை அமைச்சரை சந்தித்து தமிழக அரசு சார்பில் சில கோரிக்கைகள் விடுக்கப்படவுள்ளது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் என திரைத்துறையில் ஜொலித்துவரும் உதயநிதி ஸ்டாலின், அரசியல் குடும்பத்தில் இருந்து வந்ததால், அரசியல் களத்திலும் களமிறங்கினார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டடு சட்டமன்ற உறுப்பினரானார்.

பின்னர், விளையாட்டுத் துறை அமைச்சர் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது. விளையாட்டுத் துறை அமைச்சரான பிறகு, ஒடிஸாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட்டுத் துறை சம்பந்தமாக பல்வேறு ஆய்வுகளை அவர் மேற்கொண்டார்.

அதுதொடர்பாக ஆய்வறிக்கையையும் முதல்வர் ஸ்டாலினிடம் அவர் வழங்கினார். இந்நிலையில், நாளை முதல்முறையாக டெல்லி செல்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

JNU மாணவர்கள் உடன் அவர் சந்திக்கவுள்ளார். மத்திய விளையாட்டு துறை அமைச்சரை சந்தித்து தமிழக அரசு சார்பில் சில கோரிக்கைகள் விடுக்கப்படவுள்ளது.

மார்ச் 1 ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளுக்காக வட மாநில கட்சித் தலைவர்களை அழைக்கவும் இந்தப் பயணத்தில் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) தமிழக மாணவர் தாக்கப்பட்டுவிட்டார் என செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

“இனவெறி கொண்டு கொலை வெறி தாக்குதலை நடத்துவதா? பெண்ணுரிமை, சமூக நீதி போராளி தந்தை பெரியார், பொதுவுடைமை தலைவர்களின் உருவப்படங்களை உடைப்பதா?” என கேள்விகளை எழுப்பி தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கேள்விக் கணைகளைத் தொடுத்து இருந்தார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.