DMK Invites Kamal Haasan: கமல்ஹாசனுக்கு திமுக நேரடி அழைப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Dmk Invites Kamal Haasan: கமல்ஹாசனுக்கு திமுக நேரடி அழைப்பு!

DMK Invites Kamal Haasan: கமல்ஹாசனுக்கு திமுக நேரடி அழைப்பு!

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 26, 2023 02:24 PM IST

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை நடிகர் கமல்ஹாசன் திறந்து வைக்க நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன்

இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ஆதரவைத் தெரிவித்து இருந்தார். அதேசமயம் அவருக்கு ஆதரவு கேட்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரமும் மேற்கொண்டார்.

தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எழுபதாவது பிறந்த நாள் வரும் மார்ச் ஒன்றாம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வரும் 28ஆம் தேதி பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் புகைப்பட கண்காட்சி நடைபெற உள்ளது.

கமல்ஹாசனுக்கு  அழைப்பு
கமல்ஹாசனுக்கு அழைப்பு

இதனைத் திறந்து வைப்பதற்காக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஐசரி கணேஷ் ஆகியோர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யக் கட்சியின் அலுவலகத்தில் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி உள்ளனர்.

இது குறித்து அமைச்சர் சேகர்பாபு, முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் கடந்து வந்து பாதையை விளக்கும்படி இந்த புகைப்பட கண்காட்சி இருக்கும் எனவும், இதனைத் திறந்து வைக்கக் கமலஹாசன் வருகை தருவது திமுக கட்சியினருக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரும் எனவும் தெரிவித்துள்ளார்.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.