தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Nellai Issue: பல் பிடுங்கிய விவகாரம்.. தூத்துக்குடி எஸ்.பிக்கு கூடுதல் பொறுப்பு!

Nellai Issue: பல் பிடுங்கிய விவகாரம்.. தூத்துக்குடி எஸ்.பிக்கு கூடுதல் பொறுப்பு!

Divya Sekar HT Tamil
Apr 04, 2023 11:46 AM IST

Tooth pulling issue : நெல்லை பற்களை பிடுங்கிய விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியான பாலாஜி சரவணன் நெல்லை மாவட்டத்தை கூடுதலாக கவனித்துக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல் பிடுங்கிய விவகாரம்
பல் பிடுங்கிய விவகாரம்

ட்ரெண்டிங் செய்திகள்

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்து வந்ததாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்ததையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதேபோல் 10-க்கும் மேற்பட்டோருக்கு இவ்வாறு தண்டனை அளித்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் கருத்துகள் பகிரப்பட்டு வந்தன. இளைஞர்களின் பற்களை உடைத்ததுடன், அவர்களது வாயில் ஜல்லி கற்களை போட்டு கொடுமைப்படுத்தியதாகவும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து உதவி காவல் துறை கண்காணிப்பாளர் பல்வீர்சிங் சஸ்பெண்டு செய்யப்பட்டார். மேலும் இந்த விவகாரத்தில் கல்லிடைக்குறிச்சி காவலர் ராஜ்குமார், விக்கிரமசிங்கபுரம் காவலர் போகபூமன் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றபட்டுள்ளனர்.

மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்தது. புகார் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையமும், மாவட்ட நிர்வாகம் சார்பில், சேரன்மாதேவி உதவி ஆட்சியர் முகமது சபிர் ஆலம் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

மேலும், இது தொடர்பாக நெல்லை மாவட்ட எஸ்.பி. சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியான பாலாஜி சரவணன் நெல்லை மாவட்டத்தை கூடுதலாக கவனித்துக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்